டெஹ்ரானில் நடைபெற்ற உலக சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஹரிகா வெண்கலப்பதக்கம் பெற்றார்.
ஈரான் டெஹ்ரானில் நடைபெற்ற இந்த பெண்களுக்கான செஸ் போட்டியில் 64 பேர் கலந்து கொண்டனர். பிப்ரவரி 11 முதல் மார்ச் 5 வரை நடைபெற்ற இந்த போட்டியில் இதில் இந்தியாவை சேர்ந்த ஹரிகா வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இறுதிப்போட்டியின்போது சீனா வீராங்கனையிடம் மோதியபோது டைபிரேக்கரில்ஒரு பாய்ன்டில் தோல்வியுற்றதன் காரணமாக இறுதி வாய்ப்பை இழந்தார். அதன் காரணமாக அவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
வெண்கலம் பெற்று வந்த ஹரிகாவை விமான நிலையத்தில், வரவேற்கவோ, அவரது வெற்றி குறித்து கொண்டாடவோ இந்திய விளையாட்டுத்துறை மறந்துவிட்டது. தகுதியான ஒரு விளையாட்டை அங்கீரிக்க யாரும் இல்லை. அவரது பெற்றோர் மட்டுமே விமான நிலையம் வந்து வரவேற்றனர்.
இந்தியர்களை பொறுத்தவரையில் ஒன்றுமில்லாத கிரிக்கெட்டை தலையில் வைத்து கொண்டாடு வார்கள். ஆனால் மேலும் எத்தனையோ விளையாட்டுக்களில் நமது நாட்டவர்கள் உச்சம்பெற்று உள்ளனர். அவர்களை கொண்டாட மறந்துவிடுகிறார்கள் என்று குற்றம்சாட்டி உள்ளது அகில இந்திய செஸ் கூட்டமைப்பு.
இதுகுறித்து ஹரிகா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
செஸ் ஒரு சிக்கலான விளையாட்டு. தனக்கு அரை இறுதி சுற்றில், வெற்றி மிகவும் நெருக்கமாக இருந்தது, ஆனால் ஒரு சிறிய பிழை விட்டதால் இறுதி போட்டி வாய்ப்பு நழுவியது என்று கூறி உள்ளார்.