சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி திவீரமாக நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்படும் என ஏப்ரல் 26-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கருணாநிதி சிலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முதலமைச்சர் அறிவித்த அன்றே தொடங்கப்பட்டது. இந்நிலையில், கருணாநிதி சிலை, பீடம் உள்ளிட்ட பணிகள் சுமார் ரூ.156 இலட்சம் மதிப்பில் நடைபெறுவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றே சிலையும் திறக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த சிலை, இதுவரை நிறுவப்பட்ட சிலைகளிலேயே மிகவும் உயரமான சிலையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிலை வெண்கலத்தால் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.