சைபீரியா: சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் ஒரு ஆண் பனி யானையின் எலும்புக்கூடு ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு சைபீரிய ஏரியின் ஆழமற்றப் பகுதியில் இந்த எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மண்டை ஓட்டின் ஒரு பகுதி, பல விலா எலும்புகள், முன்கை எலும்புகள், மென்மையான திசுக்கள் ஆகியவை கிடைத்துள்ளன. ரஷ்யாவின் தொலைதூரப் பகுதியான யமால் தீபகற்பத்தில் இந்த மிச்சங்கள் கடந்த ஜூலை 23ம் தேதி கண்டெடுக்கப்பட்டன. இப்பகுதி ஆர்க்டிக் வளையத்திற்கு மேலுள்ள பகுதியாகும்.

இப்பகுதியில், வேறு ஏதேனும் கிடைக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு, ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியில், சுமார் 18000 ஆண்டுகள் வயதுடைய ஒரு நாய்க்குட்டியின் மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.