பறவையை கண்டான் விமானம் படைத்தான்…. என்று கண்ணதாசன் பாடிவைத்தது….

விமானத்தை மட்டுமல்ல விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியையும் பறவையை பார்த்து தான் செய்திருக்கிறார்கள் போலும்.

மரம்கொத்தி பறவை, நமது கிராமப்புறங்களில் ‘டொக் டொக்’ என்று மரங்களை தனது அலகுகளால் கொத்தி அழகாய் எழுப்பும் ஓசை, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மனதிலும் தாளம் போடவைக்கும்.

தாளம் மட்டுமே போட்டு ரசித்து சென்றுவிடும் நம்மில் யாரோ சிலர், இந்த பறவையை பற்றி ஆராய்ச்சி செய்தபோதுதான் தெரிந்தது, இது ஒரு நொடிக்கு 20 முறை மரத்தை கொத்துமாம் அதாவது ஒரு நாள் முழுக்க 12000 முறை கொத்துகிறதாம்.

கேட்பதற்கு… இல்லை இல்லை… படிப்பதற்க்கே நமக்கு தலைசுற்றுகிறது, இந்த பறவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதது ஆச்சர்யமே.

இந்த மரம்கொத்தியின் அலகுகளையும் அது ஏற்படுத்தும் அதிர்வுகளால் பாதிக்காத மூளையையும் ஆராய்ந்தே விமானங்களில் வைக்கப்படும் கறுப்புப்பெட்டிகளை பாதுகாக்கும் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

உயிரியலில் இருந்து வானியல் வரை இயற்கை நமக்கு உணர்த்தும் பாடங்கள் தான் எத்தனை… எத்தனை…

[youtube-feed feed=1]