சென்னை:

மிழகத்திலும் கடந்த சில நாட்களாக சிஏஏக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், தலைமைச்செயலாளர் இஸ்லாமிய அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் சனிக்கிழமை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்குமாறு கூறி உள்ளார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிகத்தின் சில பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி வணிக நிறுவனங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி மக்களிடையே ஒருவிதமான பதற்றமும் நிலவி வருகிறது..

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில், தலைமைச் செயலாளர் சண்முகம் போராடும் அமைப்பின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சிஏஏ சட்டம் குறித்து சிறுபான்மையினரிடையே ஏற்பட்டிருக்கும் ஐயப்பாடுகளை களையும் வகையில், இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களை நேரில் கலந்து ஆலோசிக்க வரும் சனிக்கிழமை (14-3-2020) மாலை 4 மணி அளவில் தலைமைச் செயலகம், பழைய கட்டிடம் 2வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் தனது தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.