வாஷிங்டன்: இந்தியர்களின் அமோக வெற்றியைப் பார்ப்பது வியப்பாக இருக்கிறது என்று இளம் விஞ்ஞானியான பேட்ரிக் கொலிசன். இந்திய திறமைகளால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது, என இளம் விஞ்ஞானி மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தொழிலதிபரான எலன் மஸ்க், வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
உலககின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சமுக வலைதளங்களின் தலைவர்களாக இந்தியாவைச் சேர்ந்தவர்களே நியமிக்கப் பட்டு வருகின்றனர். அதுபோல அமெரிக்க அரசின் பெரும்பாலான முக்கிய பொறுப்புகளிலும் இந்தியாவைச் சேர்ந்த வம்சா வழியினரே நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்தியர்களின் நிர்வாக திறமைக்கு உலக நாடுகள் மதிப்பளித்து, சிறந்தவாய்ப்புகளை வழங்கி சிறப்பித்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது டிவிட்டர் சமூக வலைதளத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பராக் அகர்வால் என்ற இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது இந்தியர்களுக்கு பெருமையை சேர்த்துள்ளது. இந்த நியமனத்துக்கு உலக நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வாழ்த்தும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நியமனம் குறித்து டிவிட் பதிவிட்டுள்ள, தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), இந்திய திறமைகளால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது என்று கூறி, பராக் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
1971ம் ஆண்டு பிறந்த இளம் விஞ்ஞானியான எலன்மஸ்க், தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். இவர் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில், விண்ணுக்கு ராக்கெட் அனுப்பி ஆய்வு மேற்கொள்வதுடன், விண்வெளி சுற்றுலாவையும் அறிமுகப்படுத்தி உள்ளார். மேலும், பேபால் (PayPal) டெஸ்லா மோட்டார்ஸ், மற்றும் ஜிப்2 ஆகிய நிறுவனங்களின் ஆரம்ப கால முதலீட்டாளர் ஆவார். மஸ்க் அவற்றின் இணை நிறுவனர்களில் ஒருவரும் ஆவார்.
இதுபோல, பிரபல இளம் விஞ்ஞானியும் தொழிலதிபருமான பேட்ரிக் கொலிசனும் (Patrick Collison), பராக் அகர்வால் நியமனத்துக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளர்.
அதில், Google, Microsoft, Adobe, IBM, Palo Alto Networks, இப்போது ட்விட்டர் நிறுவனங்கள், இந்தியாவைச் சேர்ந்த வளர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகளால் இயக்கப்படுகிறது. இந்தியர்களின் அமோக வெற்றியைப் பார்ப்பது வியப்பாக இருக்கிறது இது தொழில்நுட்ப உலகில் மற்றும் ஒரு நல்ல நினைவூட்டல். புலம்பெயர்ந்தோருக்கு அமெரிக்கா வழங்கும் வாய்ப்பு. (வாழ்த்துக்கள், @பராகா!) என தெரிவித்து உள்ளார்.