ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ. பதவியை ஜாக் டோர்ஸி ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

37 வயதாகும் பராக் அகர்வால் 2005 ம் ஆண்டு ஐ.ஐ.டி. பாம்பே வில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க மென்பொருள் நிறுவனமான ‘ஸ்ட்ரைப்’ சி.இ.ஓ. பேட்ரிக், ட்விட்டர், கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப், ஃபலோ அல்டோ, வி.எம். வேர் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை இந்தியர்கள் ஏற்றிருப்பதும் தொழில்நுட்ப உலகில் இந்தியர்களின் அற்புதமான வெற்றியைப் பார்ப்பதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மஸ்க் “இந்தியர்களின் திறமையால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியர்கள் தலைமை பொறுப்பில் இருக்கும் உலகின் முன்னணி நிறுவனங்களின் பட்டியல் :

ட்விட்டர் – பராக் அகர்வால்
கூகுள் – சுந்தர் பிச்சை
மைக்ரோசாப்ட் – சத்யா நாதெல்லா
ஐபிஎம் – அரவிந்த் கிருஷ்ணா
அடோப்- சாந்தனு நாராயண்
வி.எம். வேர் – ரகு ரகுராம்
ஃபலோ அல்டோ – நிகேஷ் அரோரா