கேப்டவுன்:
களிர் டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடங்க உள்ளது.

8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில் நடக்க இருந்த இந்த போட்டி உலக கோப்பை கால்பந்து போட்டி காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்கிறது.

மொத்தம் 23 ஆட்டங்கள் கேப்டவுன், பார்ல், கெபேஹா ஆகிய நகரங்களில் நடக்க உள்ளது.

இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

[youtube-feed feed=1]