வாஷிங்டன்: லாபகரமாக நடைபெற்றுவரும் பிரபல வலைதள நிறுவனமான யாகூ நிறுவனமும், 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது. அதாவது, மொத்தமுள்ள ஊழியர்களில் 20 சதவிகிம் ஊழியர்கள் இந்த ஆண்டுக்குள்  குறைக்கப்படுவார்கள் என தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பெரும் தகவல் தொடர்பு நிறுவனங்கள், ஐடிநிறுவனங்கள் தங்களது ஊழியர்களை குறைத்து வருகிறது. ஏற்கனவே அமேஷான், மைக்ரோசாப்ட், கூகுள், டிவிட்டர், பேஸ்புக் உள்பட பல்வேறு நிறுவனங்கள் லட்சக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், நேற்று பிரபல நிறுவனமான டிஸ்னி லாண்ட் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்தது. தொழில்துறை முழுவதும் பல பணிநீக்கங்களுக்கு மத்தியில்  யாகூ நிறுவனமும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது.  இந்த வார தொடக்கத்தில் சுமார் 1000 பேரை பணி நீக்கம் செய்ய யாகூ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

யாகூ நிறுவனம், தனது விளம்பர தொழில்நுட்பப் பிரிவை மறுசீரமைக்கும் ஒரு பெரிய திட்டத்தில் முதல் சுற்று வெட்டுக்களில் சுமார் 1,000 வேலைகளை அல்லது அதன் பணியாளர்களில் சுமார் 12% குறைக்கும் என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் இன்க்.க்கு சொந்தமான நிறுவனம், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் Yahoo வணிக விளம்பர தொழில் நுட்பப் பிரிவில் பணியாளர்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 50% அல்லது யாகூவின் பணியாளர்களில் 20% க்கும் அதிகமாக குறைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளது. “இன்று அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் இந்த பிரிவுக்கு சிறந்த வணிகத் திட்டத்தை உருவாக்குவது பற்றியது” என்று தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் லான்சோன் வியாழக்கிழமை ஒரு நேர்காணலில் கூறினார்.

யாகூ நிறுவனம் மூலம் நல்ல லாபத்தை அடைத்துள்ளோம். இருப்பினும் விளம்பர சந்தையில் சந்திக்கும் பிரச்னைகளை காட்டிலும், நிறுவனத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை மறுசீரமைப்பு செய்வதன் காரணமாகவே இந்த பணி நீக்கம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் யாகூ அட்வர்டைசிங் பிரிவு உருவாக்கப்பட்டு, நிறுவனத்தின் பிற சொத்துகளான Yahoo Finance, Yahoo News and Yahoo Sports போன்றவற்றின் விளம்பர விற்பனை குழுவை மையப்படுத்தி இயங்கும். பணியை இழக்கும் ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ள பிற பணிகளுக்கு பரிசீலனை செய்யப்படுவார்கள் என்றார்

அடுத்தடுத்து பெரு நிறுவனங்களில் இருந்து பல ஆயிரம் பேர் கொத்துக்கொத்தாக வெளியேற்றப்படும் சூழல், மென்பொருள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்  மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.