டெல்லி: மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில்  நிறைவேறியது. ,இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. இந்த நிலையில் பெண்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்த 2 எம்.பி.க்களும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில், பெண்களுக்கு 33சதவிகித இடஒதுக்கீடு செய்யும் வகையில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாமீது அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் கருத்து பதிவிட்ட நிலையில், இந்த மசோதாமீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த மசோதாமீது, அவையில் இருந்த 456  எம்.பிக்களில் 454 எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 2 எம்.பிக்கள் மட்டுமே இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த நிலையில், பெண்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்த எம்.பி.க்கள் யார் என்பது குறித்த தகவல் வெளியானது.

அவர்கள், அகில இந்திய மஜ்லீஸ் இத்திகாதுல் முஸ்லிமீன் கட்சி என்ற பெயரில் இஸ்லாமிய கட்சியை நடத்தி வரும் கட்சியின்  தலைவர் அசாதுதீன் ஓவைசி, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான இம்தியாஸ் ஜலீல் என்பது தெரிய வந்துள்ளது.

பொதுவாக இஸ்லாமிய சமூகத்தில், முத்தலாக் மட்டுமின்றி, உடல்முழுவதும் மூடும் வகையில் புர்கா அணிய கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. காலத்திற்கு ஏற்ப அதை மாற்ற விரும்பாத நிலையில் இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டமும் உள்ளது. இதை ஆதரிப்பதுபோல, அசாதுதீன் ஓவைசி பெண்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார். இந்த மசோதாமீது பேசிய ஓவைசி,

 இந்த மசோதாவில்  ஒரு திருத்தத்தை முன்வைத்து, அதன் மீது பிரிவு வாக்கெடுப்பைக் கோரினார்.  மேலும், “இந்த மசோதா முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. மோடி அரசு   பெண்களுக்கு மட்டுமே பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க விரும்புகிறது. இது ஒரு ஓபிசி எதிர்ப்பு மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு மசோதா  என்று கூறினார்.

இதையடுத்து, அவர் மற்றும் அவரு கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.பி.யான இம்தியாஸ் ஜலீல் ஆகியோ , மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்.

இதையடுத்து வாக்கெடுப்பின் மூலம்  மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மசோதா தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதா என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே இந்த மசோதா அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.