சென்னை:
இன்று மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை கவுதமி திடீரென மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை திடீரென மெரினாவில் உள்ள ஜெ.சமாதிக்கு தனது மகளுடன் வந்த கவுதமி, அங்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியதாக கூறிய அவர். ஜெயலலிதா இல்லாததால் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை ரஜினி, கமலால் உடனடியாக நிரப்பிவிட முடியாது என்றும் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel