டில்லி:

இந்த ஆண்டு இறுதிக்குள் ராணுவ போலீஸ் பிரிவில் பெண்கள் சேர்க்கப்படவுள்ளனர். மொத்தம் 800 பேர் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் ஆண்டு 52 பேர கொண்ட ஒரு பிரிவு தேர்வு செய்யப்படும்.

இது குறித்து டேராடூனில் ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில், ‘‘இதற்கான ஆட்கள் தேர்வு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும்’’ என்றார். கடந்த 2017ம் ஆண்டு அதிகாரிகள் அல்லாத பணியிடங்களுக்கு பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ராவத் அறிவித்திருந்தார். இதற்கான தேதி விபரங்கள் எதுவும் அப்போது குறிப்பிடப்படவில்லை.

‘‘பாலின குற்ற செயல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ராணுவ போலீஸ் பிரிவில் பெண்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது’’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.