சென்னை

லவச பேருந்து சலுகை மூலம் பெண்கள் சராசரியாக ரூ.600 முதல் ரூ.1200 வரை சேமிக்கின்றனர் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் ஒரு திருமணவிழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்.  அந்த விழாவில் அவருடன் தமிழக அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உரையில்

“தற்போது  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஓராண்டு காலம்தான் முடிந்திருக்கிறது. இந்த ஓராண்டு காலத்தில் 10 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்தால் எதை சாதிக்க முடியுமோ அதைவிட பல மடங்கு சாதனையை இன்றைக்கு நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம்.  இவ்வாறு நாம் செய்துள்ள சாதனைகளில் ஒரு மிகப்பெரிய, ஒரு அளப்பறிய சாதனை என்னவென்று சொன்னால், மகளிருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய இலவச பேருந்து சலுகை. ஆகும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பெண்கள் அதிகளவிற்குப் பயன்பெறக்கூடிய அளவிற்கு  இந்த திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பணிக்குச் செல்லக்கூடிய பெண்களின் அன்றாடச் செலவில் பெரும் சுமையை நாம் குறைத்து இருக்கிறோம்.

புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய சாதனையை நாம் செய்து முடித்திருக்கிறோம்.  அந்தப் பெண்கள் அன்றாடச் செலவிற்கு இல்லை என்ற நிலையில் இருந்துள்ளனர்.  இப்போது இப்படி மிச்சமாகும் பணத்தைச்  சேமிக்கக்கூடியவர்களாக ஆகியிருக்கிறார்கள்.” 

எனத் தெரிவித்துள்ளார்.