கோயம்புத்தூர்

மிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவர்களிடம் இந்தியை திணிக்க வேண்டாம் என ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த  பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் ஆளுநர்,. அமைச்சர் உள்ளிட்டோர் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினர்.   தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழாவில் உரையாற்றினார்.

அப்போது அமைச்சர்,

ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் உயர் கல்வியில் படித்து வருகின்றனர். இதுவே திராவிட மாடல்.,  அகில் இந்திய அளவில் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது.  தமிழகம் பெரியார் தோன்றிய மண் என்பதால் அனைவரும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.  அகில இந்திய அளவில் தமிழகம் 53 சதவீதம் உயர் கல்வியில் உயர்ந்து உள்ளோம்.

தமிழக ஆளுநரிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்,   எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. முக்கியமாக இந்திக்கு எதிரானவர்கள் இல்லை. இந்தியைப் படிக்க விருப்பம் உள்ளவர்கள் படிக்கட்டும். எங்களுக்கு  அதில்பிரச்சினை இல்லை. மேலும் இந்தியை மாற்று மொழியாக வைத்து கொள்ளலாம். எதிர்க்கவில்லை

அதே வேளையில் இந்தியைக் கட்டாயம் ஆக்கக் கூடாது.  இங்கு தாய் மொழியாகத் தமிழ், சர்வதேச மொழியாக ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பலர் கூறினர். அதுபோல் வேலை கிடைக்கிறதா?.  ஆனால் இந்தி படித்தவர்கள் இங்கு பானி பூரி தான் விற்பனை செய்கின்றனர்.

இன்டர்நேஷனல் மொழியான ஆங்கிலத்தைப் படித்து வரும்போது‌ மாற்று மொழி எதற்கு. புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களைப் பின்பற்றத் தயாராக உள்ளோமே தவிர மொழியில் எங்கள் சிஸ்டத்தை தான் பின்பற்றுவோம் “

எனக் கூறி உள்ளார்..