சென்னை,

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வன்முறையின் போது சிலர் என்னிடம் தகாத முறையில் நடந்தனர். நான் மானபங்கப்படுத்தப்பட்டேன் என பெண் போலீஸ் ஒருவர் திடீரென புகார் அளித்துள்ளார்.

கடந்த 23ந்தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்தை வலுக்கட்டாயமாக போலீசார் கலைத்தபோது, சமூக விரோதிகளால் பல இடங்களில் கலவரம் நடைபெற்றது.

அப்போது, போலீஸ் நிலையத்திற்குள் வந்த வன்முறையாளர்கள் சிலர் என்னிடம் தகாத முறையில் நடந்தனர் என்று ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிந்து வரும் தலைமை காவலர் துர்கா தேவி என்ற பெண் காவலர், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

தன்னுடன் வேலைப் பார்க்கும் மேலும் 5 போலீஸாருடன் சேர்ந்து சென்று இந்த புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிநாளான ஜனவரி 23ந் தேதி வன்முறை வெடித்தது. அப்போது சிலர் எங்கள் காவல் நிலையத்தை நோக்கி வந்தனர். அவர்களை தடுக்க போலீஸார் பேரிகேட் அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர்.

அப்போது அங்கு வந்தவர்கள் பேரிகேட்டை தகர்த்து உள்ளே வந்தனர். அப்போது ஒருவர் வீசிய கல் என் மீது தோள்பட்டையில் விழுந்தது. இதனால் நான்  காயமடைந்ததால் போலீஸ் நிலையம் உள்ளே சென்றுவிட்டேன். அப்போது அங்கு வந்த சிலர் என்னை தகாத முறையில் தொட்டனர் என தெரிவித்துள்ளார்.

போலீஸ் நிலையத்திற்குள்ளே வந்து வன்முறையாளர்கள் தொட்டனர் என்று பெண் போலீசார் கூறுவது யாரை….?

வீடுகளுக்கு தீவைப்பு, வண்டிகள் உடைப்பு, பொதுமக்களை அச்சுறுத்தியது  போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்ட போலீசாரையே சொல்கிறாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகினறனர்.