மொராதாபாத்

பி மாநிலத்தில் ஒரு வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.18 லட்சம் பணத்தைக் கரையான் அரித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மொரோதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அல்கா பதக் என்பவர் கடந்த 2022 அக்டோபர் முதல் பெங்க் ஆஃப் பரோடா அஷியானா கிளையில் வங்கி லாக்கரை வைத்திருந்தார், அவர் தனது மகளின் திருமணத்துக்காக இந்த லாக்கரில் ரூ.18 லட்சம் ரொக்கப்பணம் வைத்திருந்தார்.

அவரது லாக்கர் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வங்கி ஊழியர்கள் அவரை அழைத்ததால் அவர் வங்கிக்குச் சென்றுள்ளார்  அப்போது அவர் வஞ்கி லாக்கரை திறந்து பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.18 லட்சம் ரொக்கம் கறையான்களால் அரிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ந்து போனார்.

அல்கா பத்க் இது குறித்து வங்கி ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.  வங்கி ஊழியர்கள் தங்கள் தலைமை அலுவலகத்துக்குப் புகார் குறித்து தகவல் அளித்து அவர்கள் பதிலுக்காகக் காத்திருப்பதாகக் கூறி உள்ளனர்  அந்த பகுதியில் இச்சம்பவம் கடும் பரப்பரைஇ ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் ரிசர்வ் வங்கியின் விதிப்படி வங்கி லாக்கரில் ரொக்கம் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.  மேலும் இவ்வாறு லாக்கரில் வைக்கப்படும் ரொக்கம் திருட்டுப் போனாலோ அல்லது தீ விபத்து போன்றவற்றால் இழப்பு ஏற்பட்டாலோ அதற்கு அந்த வங்கி பொறுப்பு  ஏற்லாட்ஜி என விதியில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.