‘மகளிர் மட்டும்’ அரசு பஸ்களில் ஓசியில் பயணிக்கலாம்..

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் பண்டிகை- ’’ரக்‌ஷா பந்தன்’.

சகோதரனாகக் கருதும் ஆணின் கையில், பெண்கள், ’’ராக்கி கயிறு’’ கட்டுவது, இந்த விழாவின் ஓர் அம்சம்.

வட இந்தியாவில் இந்த பண்டிகை மிகவும் பிரசித்தம்.

நாளைய தினம் ‘ரக்‌ஷா பந்தன்’’ கொண்டாடப்படுவதையொட்டி, உத்தரப்பிரதேச மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என முதல்- அமைச்சர் யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார்.

‘ஏசி’ பஸ் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு பஸ்களிலும் இன்று ( 2 ஆம் தேதி) நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் எனத் தெரிவித்துள்ள யோகி, கொரோனா காரணமாக பொதுக்கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்திலும் அரசு பேருந்துகளில் பெண்கள் ‘ரக்‌ஷா பந்தனை’ யொட்டி இலவச பயணம் செய்யலாம் என அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ஆனால் ஏசி மற்றும் வால்வோ பஸ்களில் பயணிக்க முடியாது.

-பா.பாரதி.