சீனா: சீனாவில் ரியல் எஸ்டேட்களின் விலை எகிறி வரும் வேளையில் யாராலும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத ஒரு தந்திரத்தை பயன்படுத்தி மிக எளிதாக ஒரு வீட்டை வாங்கி ஒட்டுமொத்த சீனாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ஒரு பெண்.

xioli

சியோலி (அவர் உண்மைப் பெயர் இது இல்லையாம்) என்ற அந்த பலே கில்லாடிப் பெண் செய்த தந்திரம் இதுதான். தனது 20 காதலர்களிடமும்(!) தனக்கு புதிதாக வெளிவந்துள்ள ஐஃபோன்-7 வாங்கித்தரும்படி சொல்லியிருக்கிறார். சியோலி தன்னைத்தான் காதலிக்கிறாள் என்று நம்பிய 20 பேரும் கஷ்டப்பட்டு ஆளுக்கு ஒரு ஐஃபோந்7 வாங்கி அவளுக்கு பரிசளித்திருக்கிறார்கள். தனது காதலிக்கு இன்னும் 19 காதலர்கள் இருக்கிறார்கள் என்று அந்த 20 பேருக்கும் தெரியாது போலும்.
அனைவரிடமும் தான் கேட்ட புது ஐஃபோன் வந்து சேர்ந்தவுடன் அதை எடுத்து அதை ஹூய்-ஷூ-பாவோ என்ற பழைய பொருட்களை விற்பனை செய்யும் இணையதளத்தில் நல்ல விலைக்கு விற்க அவருக்கு 115,010 யுவான்கள் கிடைத்திருக்கின்றன. இப்பணத்தை வைத்து ஒரு நல்ல வீட்டுக்கு டெப்பாசிட் கட்டிவிட்டாராம் சியோலி.
இவரது தந்திரம் இவரது நண்பிகள் மூலம் சமூகவலைதளத்தில் பரவ, சீனாவில் “ஒரு வீட்டுக்கு 20 மொபைல்கள்” என்ற ஹேஷ்டாக் டிரண்ட் ஆகி விட்டதாம். இப்போது பிபிசி வரை சியோலியின் பேட்டிக்காக காத்திருக்கிறதாம். சியோலி தனது பெயர் கெட்டுவிடும் என்பதை கருத்தில் கொண்டு பேட்டிகளை தவிர்த்து வருகிறாராம்.
சியோலி மிகவும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண். இவரது தந்திரத்தை பலரும் வியந்து பாராட்டி வருகிறார்கள். எனக்கெல்லாம் ஒரு காதலனுக்கே வழியில்லை, இவள் எப்படித்தான் 20 பேரை காதலித்து 20 பேரிடமும் தந்திரமாக பேசி மொபைல் வாங்கினாளோ! என்று ஒரு பெண் சமூகவலைதளத்தில் பகிரங்கமாகவே தனது ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார். வேறு சிலரோ “உலகத்திலேயே வெட்கங்கெட்டவள் இவளாகத்தான் இருக்கும்!” என்று கண்டபடி இவரை அர்ச்சித்தும் வருகின்றனர்.
ஆனால் சியோலியை நம்பி அவளுக்கு அரும்பாடுபட்டு புது ஐஃபோன் வாங்கிக்கொடுத்த அவளது காதலர்களின் மனநிலைதான் இப்போது எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.