கேட்டது திருமணப் பரிசு, கிடைத்தது விவாகரத்து: இம்ரானின் முன்னாள் மனைவி

Must read

கடந்த ஆண்டு இதே நாள் (அக்டோபர் 31) என் கணவரிடன் திருமணநாள் பரிசு கேட்டேன் அவர் எனக்கு பரிசாகக் கொடுத்ததோ விவாகரத்து என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம் நகைச்சுவையாக ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

reham

ரெஹாம் ஒரு தொலைக்காட்சி நிருபராவார். இம்ரானுக்கும் அவருக்குமான திருமண உறவு வெறும் 10 மாதங்களே நீடித்தது. தன் மனைவி தனது அரசியல் வாழ்வில் குறுக்கிடுவதாக சொல்லி அவரை இம்ரான்கான் விவாகரத்து செய்தார். ரெஹாம் இம்ரானின் இரண்டாவது மனைவியாவார். முதல் மனைவியான பிரிட்டனைச் சேர்ந்த ஜெமீமா கோல்ட்ஸ்மித்துடன் ஒன்பது ஆண்டுகள் குடும்பம் நடத்திய இம்ரான் அவரை கடந்த 2004-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இம்ரான்-ஜெமீமாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு.
கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில் தனது மணமுறிவு பற்றி தெரிவித்த ரெஹாம் “நாட்டின் மிக சக்திவாய்ந்த மனிதரை திருமணம் செய்த பெண் கூட வன்கொடுமையிலிருந்து தப்பித்துக்கொள்ள இயலாது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

More articles

Latest article