மகாராஷ்டிரா : வாடகைக்காரில் சென்ற பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த இருவர்

Must read

தானே

காராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பெண்ணை இருவர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஒரு பெண் தனது இல்லத்துக்குச் செல்ல ஷேரிங் முறையில் ஒரு வாடகைக்காரில் சென்றுள்ளார்.   அப்போது அந்த காரில் ஏற்கனவே ஒருவர் இருந்துள்ளார்.  ஷேரிங் என்பதால் அந்தப் பெண்ணும் அதே வாகனத்தில் சென்றுள்ளார்.   ஆனால் அவர் சென்ற அந்த வாகனம் வேறு வழியில் சென்றுள்ளது.

இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் வாடைக்கார் நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளார்.   காரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி ஓட்டுனரும் மற்றொருவரும் அந்தப் பென்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.    இதற்குள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதால் காவல் துறையினர் இந்த வாகனத்தை தேடி உள்ளனர்.   வழியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளைக் கொண்டு வாகனத்தை கண்டு பிடித்துள்ளனர்.

பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   அவர்கள் பெயர் சுரேஷ் மற்றும் உமேஷ் என்னும் விவரம் மட்டும் தெரிய வந்துள்ளது.   இந்த சம்பவம் குறித்து அந்த வாடகைக்கார் நிறுவனம், ”இந்த சம்பவத்துக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.   அந்த ஓட்டுனர் ஏற்கனவே பணம் கையாடல் செய்துள்ளார்.  அதனால் நெடும் காலம் முன்பே எங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article