சென்னை
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு ஒரு பெண்ணுக்கு உணவுப் பொருட்கள் கழிவு போல வாசம் வீசுவதாக உணர்ந்து தவித்து வருகிறார்.
நல்ல வாசம் வீசும் உணவைப் பலரும் விரும்பி உட்கொள்ளுவது என்பதே உலகின் வழக்கமாகும். உணவின் சுவையை அதிகரிப்பதில் வாசனைக்கு அதிக பங்கு உண்டு. ஆனால் எலுமிச்சை ஒருவருக்கு பெட்ரோல் வாசனையுடனும் தோசை என்பது அழுகிய காய்கறி வாசனையுடன் இருந்தால் அவர் நிலை என்னவாகும்? சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவப் பட்ட மேற்படிப்பு படிக்கும் சஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வுக்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அவருக்குக் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கல்ஈல் கொரோனா பாதிப்பு உருவாகி சிகிச்சை பெற்று குணமாகி உள்ளார். அவருக்கு அந்த நேரத்தில் அணோஸ்மியா என்னும் வாசம் மற்றும் சுவை அறியாத நிலை ஏற்பட்டது. ஆனால் குணமான பிறகு அவருடைய வாசம் அறியும் தன்மை மாறிப்போனது. அவருக்கு பரோஸ்மியா என்னும் நிலை ஏற்பட்டு அனைத்து பொருட்களின் வாசமும் தவறான முறையும் உணரும் நிலை உண்டானது. இந்த உணர்வால் அவருக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டது.
இந்த நிலை தொற்று நோய்களுக்குப் பிறகு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். சுவை மற்றும் வாசனை தெரியாத நிலை கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 2 வாரங்களில் சரியாகும் வேளையில் சஞசனாவுக்கு 6 வாரங்களுக்கு மேல் நீடித்துள்ளது. அதன் பிறகும் பரோஸ்மியா காரணமாக அவரால் எந்த ஒரு உணவையும் உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் மிகவும் துயருற்றுள்ளார். அவரை பொறுத்தவரை உணவு என்பது தனக்கு வாந்தி அளிக்காதது அல்லது மோசமான துர்நாற்றம் அடிப்பது என இருவகை ஆனது.
இதற்கான சரியான சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் சஞ்சனா மிகவும் துயரத்தில் ஆழ்ந்தார். அதன் பிறகு அவருக்கு சமூக வலை தளங்களில் இதே போல தவிக்கும் நோயாளிகள் கொண்ட குழுவின் அறிமுகம் கிடைத்தது., அங்கு அவருக்கு எத்தகைய உணவுகள் தவறான வாசம் அளிக்காது என்பது குறித்துக் கண்டறியப் பலருடைய அனுபவங்கள் உதவின. இந்த குழுக்களில் 10 வயதான குழந்தைகளில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் வரை பல வயதினரும் இருந்தனர்.
இந்த குழுவில் பலரால் குடிநீர் கூட அருந்த முடியாத நிலையில் இருந்தனர். அவர்களுக்குக் குடிநீரில் பெட்ரோல் வாசனை அடித்தது. மேலும் இந்த குழுவில் உள்ள அனைவருக்கும் இதே நிலை தொடர்ந்ததே தவிரக் குணமாகவில்லை என்பது காஞ்சனாவுக்கு மேலும் துயரத்தை அளித்தது. ஆனால் தற்போது தனக்கு அதிகம் பாதிப்பளிக்கும் வாசனை இல்லாத உணவுகளை உண்ண இந்த குழு அவருக்கு உதவி உள்ளது.
இது குறித்து கே எம் சி டீன் வசந்தமணி, “கே எம் சி யில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி யாருக்கும் இந்நிலை உண்டாகவில்லை. தமிழகத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே அபூர்வமாக அவ்வாறு ஏற்பட்டுள்ளது இது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் இப்போது எதுவும் சொல்லமுடியாத நிலை உள்ளது. சுவை மற்றும் வாசமறியா நிலை கொரோனாவின் போது இருக்கும் என்பதைத் தவிர அதன் பிறகு தவறான வாசனையை உணர்வது என்பது மிகவும் அரிதானதாகும்” எனத் தெரிவித்துள்ளார்..