‘மொட்டை ‘  உஷா                                    முடியுடன்  உஷா

சென்னை,

பொதுவாக கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, கொடுக்கப்படும் ரேடியேஷன் தெரபி காரண மாக முடி கொட்டுவது வாடிக்கை.

சென்னை அடையாரில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சென்றாலே நாம் இதை பார்ப்ப முடியும். பெரும்பாலான நோயாளிகள் தலையில் முடி இல்லாமல் சிகிச்சை பெற்று வருவது நமது இதயத்தை கலங்கச்செய்யும்.

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒரு புறம் தங்களுக்கு உள்ள நோய் குறித்து வருந்தி னாலும், தாங்கள்  பார்த்து பார்த்து வளர்த்து வந்த தலைமுடி, முழுவதுமாக கொட்டப்பட்டுள்ளது கண்டு மனம் வெதும்புவதும் உண்டு.

இவர்களின் மன வருத்தத்தை போக்க செயற்கை முறையில் தலைமுடியை விக் (டோப்பா) மட்டுமே பொறுத்த முடியும். அதை தயார்   அதிக அளவில் பெண்களின் கூந்தல் தேவைப்படுகிறது.

இதுபோன்ற நோயாளிகளின் விருப்பங்களை போக்கும் வகையில், புற்று நோய் மருத்துவ மனைகள் பெண்களின் கூந்தல்களை டொனேஷன்களாக பெற்றுக்கொள்கிறார்கள்.

சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் இந்த வசதி உண்டு. இதன் காரணமாக சில பெண்கள் தங்களுடைய கூந்தலை கேன்சர் நோயாளிகளுக்காக தானம் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் இதுபோன்ற ஒரு முடி தானத்தை கொடுத்துள்ளார், “ராஜா மந்திரி” என்ற திரைப்படத்தின் இயக்குனர் செல்வி.உஷா கிருஷ்ணன்.

தன்னுடைய தலையை முழுவதும் வழித்து (மொட்டை)  அந்த கூந்தலை சென்னை அடையாரில் உள்ள அரசு கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சென்று தானம் செய்துள்ளார். இவர் திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடி தானம் செய்வது குறித்து உஷா கூறியதாவது,

கேன்சர் போன்ற நோயாளிகளின் மனக்குறையை போக்க என்னாலான உதவியை செய்ய நினைத்தேன். அதன் காரணமாக எனக்கு தோன்றியது அவர்களின் முடி ஆசையை போக்கும் முடிவு என்று கூறினார்.

தமது முடியின் காரணமாக ஒரு நோயாளியின் ஆசை நிறைவேறும் பட்சத்தில் எனது முடியை தானமாக கேன்சர் மருத்துவமனைக்கு கொடுக்க முன்வந்தேன்.

இதுகுறித்து பல தடவை யோசித்தும், முடியை தானம் கொடுப்பது குறித்து, அதற்கான கண்டிஷன்கள் குறித்தும் விவாதித்தேன் என்றார்.

பல தடவை முடிவு செய்து, தலையை மழிக்கலாம் என்ற செல்லும்போது, திடீரென மனம்மாறி முடியை மழிக்காமல் திரும்பியதும் உண்டு என்ற அவர்,

இந்த விஷயத்தில் திரும்ப திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் என்று யோனை என்னை வாட்டியதால்,  இறுதியாக முடிவெடுத்து, தனது தலையை மழிக்க (மொட்டை யடிக்க) கிரின் டிரென்டு சலூனுக்கு சென்றதாக குறிப்பிட்டார்.

மேலும், ஒருவர் முடியை தானம் செய்ய வேண்டுமென்றால், அதற்கு பல விதிகள் உள்ளன. நான் ஏற்கனவே அதையெல்லாம் தெரிந்து வைத்திருந்ததால், தனது முடியை அதற்கேற்ப தயார் செய்து கொடுத்ததாக கூறினார்.

முடி தானம் செய்ய கடைபிடிக்க வேண்டிய விதிகள்:

தலைமுடி குறைந்தது 15 இன்ச் நீளம் இருக்க வேண்டும், மேலும் தலையில் பேன், பொடுகு போன்ற தொல்லைகள் இருக்கக்கூடாது, தலைமுடியில் கலரிங், டை போன்றவை உபயோகப்படுத்தியிருக்கக்கூடாது, மேலும், வெட்டப்படும் முடியானது தரையில் விழாதவாறு, முனை சமமாக வெட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

தனது முடியை , முடி தானம் குறித்த விதிகளின் படியே, மழித்த முடியை  போனி டெயில் போட்டு, முனைகள் சமமாக வெட்டப்பட்டு, பகுதி பகுதியாகப் பிரித்து, இறுக்கமாக கட்டி பத்திரப்படுத்தப்பட்டது என்றும், அதை மூன்று பகுதியா பிரித்து கட்டி, ஒரு பாலீத்தின் பையில் வைத்து சீல் செய்து அடையார் கேன்சர் மருத்துவமனையில் இயங்கி வரும் முடி தானம் பிரிவில் கொடுத்து விட்டதாக கூறினார்.

இதை கூறும்போது அவரது முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது.

ஆனால், முடி மழிக்கப்பட்டதை பார்த்த எனது அம்மாதான் கோபப்பட்டாங்க.. ஆனால், நான் முடிதானம்மா… சீக்கிரம் வளர்ந்துடும் என்று சமாதானப்படுத்தினேன் என்றார் உஷா.