பாரிஸ்

சிவப்பு நிற திரவத்தை ஊற்றிக் கொண்ட் கோஷம் போட்டபடி உக்ரைன் கொடி நிற உடை அணிந்து வந்த பெண்ணல் கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் 75-வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றது.  விழாவில் பிரெஞ்சு இயக்குநர் பிலிப்பாட்டின் ‘ஆசிட்’ என்ற படம் திரையிடப்பட்டது.  படத்தை காண ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  உக்ரைனின் கொடி நிறத்தில் (மஞ்சள் – நீலம்) ஆடை அணிந்து வந்த பெண் ஒருவர் அப்போது திடீரென சிவப்பு நிற திரவத்தை உடலில் ஊற்றி கோஷமிட்டார்.

அதனால் அவர் ஆடை முழுவதும் ரத்தக் கறை படித்ததுபோல் ஆனது. இதைத் தொடர்ந்து அவரை நிகழ்விடத்தில் இருந்து உடனடியாக பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இந்த நிகழ்வால், கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.   உலக நாடுகளுக்கு உக்ரைனில் நிலவும் சூழலைக் காண்பிக்கவே இந்தச் செயலை செய்ததாக அப்பெண் தரப்பில் கூறப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்ற ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் ரஷ்யாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தது தெரிந்ததே.. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய அரசுடன் தொடர்புடைய ரஷ்யப் பிரதிநிதிகள் மற்றும் திரைப்பட நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.