சென்னை: சென்னையில் பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னையில் பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், மரக்கிளை வெட்டுதல், மரத்தில் விளம்பர பலகை வைத்தல், மரத்தை சுற்றி விளக்கு அமைத்தால் ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.