சென்னை:
நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள், வணிகர்கள் ஆவணங்கள் இன்றி ரூ.50ஆயிரம் வரை எடுத்துச்செல்லலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ந் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக தொகுதிகள்தோறும் உள்ள சட்டமன்ற அலுவலகங்கள் பூட்டப்பட்டன. ஆங்காங்கே சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பபட்டு, வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
நேற்று மட்டும் நடைபெற்ற வாகன சோதனைகளின்போது ரூ.1கோடி வரை பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு,தனி ஒருவர் ரூ. 50 ஆயிரம் வரை ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்தார்.
மேலும், ரூ. 10லட்சத்துக்கு மேல் கொண்டு சென்றால், அதுகுறித்து உடனடியாக வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.