சென்னை,
காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ,இதற்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளையை சேர்த்து அப்போதைய மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்க வேண்டும் என்று கோரி போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. அதை தொடர்ந்து, தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள அவசர சட்ட திருத்தத்துக்கு ஏதுவாக, மத்திய அரசும் 2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளையை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையை திரும்ப பெற்று கொள்வதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் நேறறு தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான தனது முந்தைய அறிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டதற்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2016 அறிவிக்கையில் ஜல்லிக்கட்டு அனுமதியுடன் வேறு அம்சங்களும் உன்னன என்றும், அறிக்கையில் உள்ள மற்ற அம்சத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று விலங்குகள் நலவாரியம் கூறியுள்ளது.