கோல்டுகோஸ்ட்:

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 80 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. 59 வெள்ளிப் பதக்கங்கள் 59 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 198 பதக்கங்களை வென்றுள்ளது.

இங்கிலாந்து அணி 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என 136 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது. போட்டியின் 11-வது நாளான நிறைவு நாளான இன்று இந்திய அணி 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது.

கனடா 4வது இடத்தையும், நியூசிலாந்து 5வது இடத்தையும் பிடித்தன. அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கிய இப்போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் இன்று நிறைவு பெற்றது. 71 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கணைகள் கலந்துகொண்டனர். நிறைவு விழாவில் குத்துச்சண்டை தங்க மங்கை மேரிகோம் இந்திய தேசியக் கொடியை ஏந்தி வந்தார்.

பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘‘காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் இந்தியரை பெருமைப்படுத்தி உள்ளனர். அற்புதமான செயல்திறன் மூலம் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளனர்.

காமன்வெல்த்தில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி உள்ளனர். தடைகளை கடந்து அர்ப்பணிப்புடன் விளையாடி உயர்ந்த வெற்றியை பெற்றுள்ளனர். காமன்வெல்த் வெற்றிகள் விளையாட்டில் ஈடுபட மேலும் இளைஞர்களை ஊக்குவிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா பளுதூக்குதலில் 9, துப்பாக்கி சுடுதல் 16, டேபிள் டென்னிஸ் 8, பேட்மிட்டன் 6, பவர்லிப்டிங் 1, அதலிட்டிக்ஸ் 3, மல்யுத்தம் 12 , பாக்சிங் 9, ஸ்குவாஷ் 2 ஆகிய பிரிவுகளில் பதக்கம் வென்றுள்ளது. தடகளத்தில் இந்தியா மிக குறைந்த எண்ணிக்கையிலே பதக்கம் வென்றுள்ளது.

பேட்மிட்டன் குழுவில் சாய்னா நேவால், சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர். பாட்மிட்டன் பிரிவில் 2 தங்கம் உட்பட ஆறு பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. தமிழ்நாடு வீரர்கள் ஜோஷுவா சின்னப்பா, தீபிகா பல்லீகல் ஆகியோரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். பளுதூக்குதலில் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.