நம் மக்களுக்கு என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் ஆசை அடங்குவதில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் உள்ள நபரை தொடர்பு கொள்ளும் தொலைபேசி முதல் அலைபேசி வந்தது. அதன்பின் ஸ்மார்ட்போன், ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்கள் வந்தது. இவ்வளவு வந்தும், அதை சார்ஜ் செய்வதற்கு பலர் சிரமப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக, படுக்கையில் படுத்துக்கொண்டே போன்கள் உபயோகிப்பவர்களுக்கு வயர் பத்தாது, ஒருபக்கமாக படுக்க வேண்டும். அவர்களின் குறைகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்க உள்ளது.
மொபைலுக்கு, சார்ஜருக்கும் 15 அடி தூரம் இருந்தாலும் வயர் இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 8 போனில் இந்த வசதி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. எனர்ஜியஸ் தயாரிக்கும் புதிய வகை வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் ஐபோன் 8 இடம்பெற உள்ளது. கருவியில் பொருத்தப்படும் சிறிய சிப், வயர்லெஸ் சார்ஜரின் பேஸ் ஸ்டேஷனுடன் இணைந்து சுமார் 15 அடி தூரம் வரை கருவியைச் சார்ஜ் செய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.