டில்லி : இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஏற்கனவே ஊழியர்களை குறைத்த நிலையில், தற்போது ஊழியர்களின் சம்பளத்தை குறைவு முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக பணிக்கு சேருபவர்களின் ஊதியத்தில் 50 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என அறிவித்து உள்ளது.
கொரோனா பேரழிவுக்கு பிறகு, பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. கூகுள், மைக்ரோ சாப்ட், டுவிட்டர், ஸ்விக்கி, அமேசான்’ ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவும், தன் ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் பணி நீக்கம் செய்தது.
முதல் கட்டமாக 450 பேரை பணி நீக்கம் செய்யும் போது கூறிய விப்ரோ, தனது நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களிடையே உயர்வான தர மதிப்பீடு உள்ளது. இதற்கு ஏற்றவாறு ஊழியர்கள் நிபுணத்துவம் இருக்க வேண்டியது அவசியம். இதற்காக பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாத பணியாளர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூறியது.
இருந்தாலும், வரும் ஆண்டுகளில் ‘கேம்பஸ் இண்டர்வியூ’ எனப்படும் வளாக தேர்வு வாயிலாக பணியாளர்கள் தேர்வு தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது, புதியவர்களின் ஊதியத்தை 50 சதவீதம் குறைத்து, ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் சம்பள தொகுப்பை வழங்கும் என விப்ரோ அறிவித்து உள்ளது.
விப்ரோ முதலில் புதியவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் வருடாந்திர பேக்கேஜ் வழங்குவதாக உறுதியளித்தது, இப்போது அது ஆரம்பத்தில் வழங்கியதை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவான சம்பளத்திற்கு அவர்களைத் சேர்க்குமா கேட்டுக்கொள்கிறது.