சியோல்,

ந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தென்கொரியாவில் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முந்தைய நாள்   பிரமாண்ட ராணுவ  அணிவகுப்பை நடத்த வடகொரிய அரசு முடிவு செய்துள்ளதாக பிரபல பத்திரிகையான சிஎன்என் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலக நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

2018ம் ஆண்டின், குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் வரும் 9-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் உலக முழுவதும் இருந்து பல்வேறு  நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அதேவேளையில், வடகொரிய வீரர்களுகும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது உலக நாடுகளிடையே வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வருடங்களாக உலக நாடுகளை தனது அணு ஆயுதங்களால் அச்சுறுத்தி வரும் வடகொரியா,   9ந்தேதி தென்கொரியாவில் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான  8-ந் தேதி பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது

இந்த  இந்த ராணுவ அணிவகுப்பின்போது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ராக்கெட்டுகள் இடம் பெற உள்ளதாகவும்,  அணு ஆயுதங்கள் இடம் பெறும் என்றும்,  இது அமெரிக்காவுக்கு விடுக்கும் எச்சரிக்கை அணிவகுப்பு என்றும்  அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த மிரட்டல் காரணமாக, தென்கொரியா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வீரர்களை அனுப்ப உள்ள உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளன.