சென்னை

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட கமாண்டர் அபிநந்தனின் தந்தை வர்தமான் ஊடகங்களை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

                                                            அபிநந்தன்

இன்று நடந்த வான் தாக்குதலில் இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். இவருடைய புகைப்படத்தை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

அத்துடன் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளதை இந்திய வெளியுறவுத் துறையும் ஊர்ஜிதம் செய்துள்ளது. சிறை பிடிக்கப்பட்ட அபிநந்தன் கேரளவை பூர்விகமாக கொண்ட சென்னை வாசி ஆவார். இவருடைய தந்தை ஏர் மார்ஷல் எஸ் வர்தமான் இந்திய விமானப்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார்.

அபிநந்தன் சிறைபிடிக்கபட்ட செய்தியை அறிந்த ஊடகங்கள் அபிநந்தனின் தந்தை வர்தாமனை தொடர்பு கொண்டு பேட்டி எடுக்க முயற்சி செய்தன. ஆனால் அவர் ஊடகங்களை சந்திக்க மறுத்துள்ளார். அத்துடன் தற்போது தம்மை ஊடகங்களை சேர்ந்த யாரும் தொடர்பு கொள்ள வேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ஊடகங்கள் தம்மை தொந்தரவு செய்வதை தவிர்க்க தனது இல்லம் அமைந்துள்ள ஜல்வாயு விகார் காலனியின் கதவுகளை வர்தமான் மூடி வைத்துள்ளார்.