சென்னை:
ரும் ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று சுமார் 1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்கும் உத்தரவில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார் என்றும் ஒரு “செய்தி” (?!) சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தத் “தகவலை” முதன் முதலில்  கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஆரம்பித்துவைத்தது,  “முதலமைச்சர்  ஜெ.  ஜெயலலிதா”  என்ற பெயரில் இயங்கும் முகநூல் பக்கம்தான்.
a
இந்த பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, “வரும் சுதந்திரதினத்தில் இருந்து 1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்க முதலமைச்சர் புரட்சித்தலைவி செல்வி. ஜெ. ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார்.
இனி ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு கடை என்ற வீதத்தில்தான் இருக்கும். இதன் மூலம் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும்.
அதோடு, ஆகஸ்ட் 15 முதல் பகல் 2 மணி முதல் இரவு 9.30 மணிவரை மட்டுமே மதுக்கடை திறந்திருக்கும்” என்றும் எழுதப்பட்டிருந்தது.
“இதை ஆகஸ்ட் 15 அன்று முதல்வர் அறிவிப்பார் என்று தலைமைச்செயலாளர்  கூறியுள்ளார்” என்றும் அந்த பதிவில் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, “தலைமைச்செயலாளர் அப்படி சொல்லவே இல்லை. தவிர முதல்வர் ஒரு அறிவிப்பைச் செய்யப்போகிறார் என்று தலைச்செயலாளர் முன்கூட்டியே சொல்லமுடியுமா..? ஆர்வக்கோளாறால், முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் முகநூல் பக்கம் துவங்கிய யாரோ சிலர், ஏதேதோ எழுதி வருகிறார்கள்” என்று தகவல் கிடைத்தது.
மேலும், “மதுக்கடைகளை எதிர்த்து சசிபெருமாள் உயிரைவிட்டபோது, தமிழகம் முழுதும் மதுவுக்கு எதிரான பெரும் கொந்தளிப்பான சூழல் நிலவியபோதும், “ஆகஸ்ட் 2015 முதல் முழு மதுவிலக்கை அறிவிக்கப்போகிறார் முதல்வர் ஜெயலிலதா” என்று ஒரு “ தகவல்”  பரவியது.  அப்போதெல்லாம் ஜெயலலிதா, இது குறித்து பேசவே இல்லை.
 

"அந்த" முகநூல் பதிவு
“அந்த” முகநூல் பதிவு

தேர்தல் பிரச்சாரத்தின்போது படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றார்.  தேர்தலில் வென்ற பிறகு ஐநூறு மதுக்கடைகளை மட்டுமே மூட முதல்வர் உத்தரவிட்டார். ஆனால் அவை, போதிய வருமானம் இல்லாத கடைகள் மற்றும் ஏற்கெனே நெடுஞ்சாலை அருகே இருந்த, மூடச்சொல்லி கோர்ட் உத்தரவிட்ட கடைகள்தான்.
ஆகவே வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 2000 மதுக்கடைகள் குறைப்பு, நேரம் குறைப்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பில்லை” என்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், “முதலமைச்சர்  ஜெ.  ஜெயலலிதா”  என்ற முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட  “மதுக்கடை குறைப்பு” பதிவை 659 பேர் பகிர்ந்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட அந்த பதிவின் லிங்க் இதுதான்:
https://www.facebook.com/permalink.php?id=1452274625053756&story_fbid=1620685368212680