![]()
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தொடர்நது போராடிவருபவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர். இன்று அவர்கள் மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று முற்பகல் சென்னை மதுரவாயல் பகுதியில் டாஸ்மாக் கடை முன்பு, மூடக்கோரி போராட்டம் நடத்தினர். போராட்டம் டநத்திய பெண்கள் மீது போலீசார் கொடூரமாகத் தடியடி நடத்தினர். இதில் பெண்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பலர் படுகாயம் அடைந்தனர்.
போலீசாரின் அத்துமீறி தாக்குதலால் ஆத்திரமான பொதுமக்கள் காவல்துறையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் பதற்றம் நிலவியது.
Patrikai.com official YouTube Channel