
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில், 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது விண்டீஸ் அணி.
இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து 4ம் நாள் ஆட்டநேர முடிவில், 37 ரன்களுக்கு, 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போதைய நிலையில், விண்டீஸ் அணியைவிட 219 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது இங்கிலாந்து.
விண்டீஸ் தரப்பில், பிராத் வெயிட் 75 ரன்களும், ப்ரூக்ஸ் 68 ரன்களும், ரோஸ்டன் சேஸ் 51 ரன்களும் அடித்து, அரைசதங்களைப் பதிவுசெய்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், சாம் கர்ரண் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இன்னும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், இந்த ஆட்டம் பெரும்பாலும் டிராவில் முடிவதற்கு வாய்ப்புள்ளது. இத்தொடரில், இங்கிலாந்தின் வெற்றி பறிபோனால், அதற்கு மழைதான் காரணமாக இருக்கும்.
Patrikai.com official YouTube Channel