விம்பிள்டன்: வென்றார் ஸ்பெயின் மகுருசா

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை வில்லியம்ஸை வென்று ஸ்பெயின் வீராங்கனை முகுருசா சாம்பியன் பட்டம் பெற்றார்.

லண்டனில் நடந்து வந்த விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப்போட்டியில் இருவரும் இன்று மோதினர். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி ஆரம்பித்தது.

முதல் செட்டில் இருவரும் சமநிலையில் இருந்தனர். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய  முகுருசா அந்த செட்டை கைப்பற்றினார். இறுதியில் 7-5, 6-0 என்ற நேர் செட்டுகளில் வீனஸை முகுருசா வென்றார்.

23 வயதாகும் முகுருசா இதற்கு முன் சென்ற வருடம் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் வென்றார்.  கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முகுருசாவின் இரண்டாவது வெற்றி இதுவாகும்.  முகுருசா உடன் இதுவரை நேருக்கு நேர் மோதிய நான்கு ஆட்டங்களில், வீனஸ் வில்லியம்ஸ் மூன்றில் வெற்றி பெற்றிருக்கிறார்.


English Summary
wimbledon-2017-women-s-final-muguruza-won-her-first-wimbled