டெல்லி: பரபரப்பான கட்டத்தில் இன்று கூடுகிறது 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.   இந்த கூட்டத்தில், ஏற்கனவே பிரதமர் மோடி தெரிவித்தபடி, ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு, பொதுமக்களக்கு தீபாவளி பரிசு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில்,  இன்றும் நாளையும் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் இந்த  கூட்டத்தில்  தற்போது பல்வேறு கட்டமாக அமலில் இருக்கும் வரி விதிப்பை 5% , 18% என இரு  பிரிவுகளில் வரும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.  அதிகபட்சமாக புகையிலை பொருட்கள், மதுபானங்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் ஆகியவற்றின் மீது 40% வரி விதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த வரி குறைப்பு காரணமாக பல பொருட்களின் விலைகள் கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளத.  பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. ஆனால், வரி குறைக்கப்படுவதால், மாநிலங்களுக்கு நிதி இழப்பு ஏற்படும் என தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், பாஜக மற்றும் அதன்கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள், ஜிஎஸ்டி குறைப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இன்று ஜிஎஸ்டி கவுன்சில் . இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி ஏற்கனவே கூறியபடி வரிகளை குறைத்து, பொதுமக்களுக்கு  தீபாவளி பரிசு கிடைக்க வழி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.