சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை, சென்னையில் துவங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில், விண்டீஸ் நாட்டின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாராவின் சாதனையை, இந்தியக் கேப்டன் விராத் கோலி தகர்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 87 டெஸ்ட் போட்டிகள், 251 ஒருநாள் போட்டிகள், மற்றும் 85 டி-20 போட்டிகள் என்று மொத்தமாக 423 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள விராத் கோலி, சர்வதேச அரங்கில் மொத்தமாக சேர்த்து 22,286 ரன்களைச் சேர்த்துள்ளார்.

பிரைன் லாராவைப் பொறுத்தவரை, 131 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 299 ஒருநாள் போட்டிகளில் என மொத்தமாக 430 சர்வதேச போட்டிகளில் ஆடி, மொத்தமாக 22,358 ரன்களைச் சேர்த்துள்ளார்.

இந்தவகையில், விராத் கோலிக்கும் பிரைன் லாராவுக்கும், இன்னும் 72 ரன்கள் மட்டுமே வித்தியாசம். நாளையப் போட்டியில், விராத் கோலி 73 ரன்களை அடிக்கும் பட்சத்தில், பிரைன் லாராவின் சாதனையை உடைக்கலாம்.