சென்னை:
ஜனவரி 16ந்தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப் பொங்கல் தமிழக மக்களிடையே ஆண்டாண்டு காலமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், அன்றைய தினம் பிரதமர் மோடியின் உரையை கேட்கும் வகையில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகஅரசின் கையாளாகத்தனத்தை அரசியல் கட்சிகளும், தமிழ் அறிஞர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் சமூக வலைதளங்களிலும் தமிழகஅரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது….
பொங்கல் விடுமுறை தினமான ஜன.16ம் தேதி மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ள 2020ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலில், ஜனவரி 16ந்தேதி பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். பிரதமர் மோடியின் உரையை கேட்க மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள செங்கோட்டையன் தலைமையிலான பள்ளிக்கல்வித் துறை, அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரித்து உள்ளது.
பொங்கலையொட்டி பெரும்பானவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சந்தோஷமாக பண்டிகையை கொண்டாட தீர்மானித்துள்ள நிலையில் பள்ளிக்க்லவித்துறையின் இந்த அறிவிப்பு கடுமையான விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.
மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக திகழும் தமிழக அரசு, தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் தினம் மற்றும் தமிழர்களின் சிறப்பு மிக்க பண்டிகையான பொங்கல் பண்டிகை, அதுவும் 16ந்தேதி விவசாயிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாக கருதும், மாடுகளை சிறப்பிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடும் நாளான விடுமுறை தினத்தில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்துள்ள செயல், தமிழக அரசின் கையலாகத்தனத்தை வெளிப்படுத்துகிறது என்று சமூக ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்…
சமூக வலைதளங்களிலும் தமிழகஅரசின் கையாலாகத்தனத்தை நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்…
எடப்பாடி தலைமையிலான அடிமை அரசும், அமைச்சர்களும், தங்களை காப்பாற்றிக்கொள்ள மோடி அரசுக்கு கைகட்டி சேவகம் செய்வதே தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பெரும் கேவலம் என்ற நிலையில், தற்போது தமிழகத்தின் பள்ளி மாணவர்களை யும் மோடிக்காக அடிமைப்படுத்த நினைப்பது பெரும் குற்றம் என்றும்… அன்றைய நாளில், பெற்றோர்கள் யாரும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் ஏராளாமானோர் குமுறி வருகின்றனர்….
தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த அறிப்பை உடனே வாபஸ் பெற வேண்டும் என்றும் தமிழக அறிஞர்கள் போர்க்கொடித் தூக்கி உள்ளனர்….