சென்னை: சென்னையில் கோடை வெயில் கொளுத்தும்  நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதன் காரணமாக,  சென்னை யில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் நேரு பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது, நடப்பாண்டு, சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும்,  தற்போதுள்ள நீர் இருப்பு போதுமானதாக இருக்கிறது  நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு  விளக்கம் அளித்துள்ளார்.

 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து கோடை காலம் தொடங்கிவிட்டது.  இன்னும் சித்திரை தொடங்காத நிலையில், மாசி மாதம் முதல் வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. பல பகுதிகளில்,  வெயிலின் தாக்கம்   100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பகல் வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையமும் பயங்ம காட்டி உள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டிலும் கோடை காலத்தில் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.  ஏற்கனவே கடந்த காலங்களில் சென்னையில் மக்கள் கடுமையான தண்ணீர்  தட்டுப்பாட்டில் சிக்கி தவித்த நிலையில், இந்த ஆண்டும், அதுபோல ஒரு நிலை உருவாகுமோ என்ற அச்சம் சென்னைவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது. காரணம், பல நீர் நிலைகள் கட்டிங்களாக மாற்றப்பட்டு உள்ளதுடன், பல நீர்நிலைகளை அரசே, வருமானம் கிடைக்கும் என்ற பெயரில், அதை சுருக்கி சுற்றுலா தளமாக மாற்றி வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

இத்ன் காரணமாக, சென்னையில், குடிநீர் இருப்பு எப்படி உள்ளது என  உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். சட்டமன்ற உறுப்பினர் காரபாக்கம் கணபதி, தண்ணீர் தட்டுபாடு ஏற்படுவதை தடுக்க  வளசரவாக்கம் தொகுதியில் கூடுதலாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் கடந்த ஆட்சி காலத்தில் 900 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.  தற்போது 1110 எம்எல்டி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.  தற்போது உள்ள தண்ணீர் கோடை காலம் வரை போதுமானதாக இருக்கும். அடுத்த கோடை காலம் வரை தடை இல்லாமல் தண்ணீர் அளிக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.  குழாய் சென்னையை இணைக்கு திட்டத்திற்கு இந்தாண்டு 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்