விழுப்புரம்:  பாமகவில் தந்தை மகனுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது.  நானே பாமக தலைவர் என கொக்கரிக்கும் மருத்துவர் ராமதாஸ், தனது மகன்  அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் எகிறுகிறது என்று காட்டமாக கூறியுள்ளார். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே மோதல் முற்றி உள்ளது. இதன் காரணமாக பாமக உடையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு , உட்கட்சி பூசலாக மாறி, கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.  கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் கட்சி இரண்டாக உடையுமா? அல்லது மாம்பழத் துண்டுகளாக சிதறுமா என்பது போகப்போகத் தெரிய வரும்.

என் உயிர் உள்ளவரை நானே பாமக தலைவர்

அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது

தூங்க முடியாமல் மனவலியை அனுபவிக்கிறேன் 

குலசாமி என்று கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள்

என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்

மைக்கை தூக்கி வீசுபவர், பாட்டிலை தூக்கி அடிப்பவர் எப்படி பெற்றோரை சந்தோசமாகவைத்திருப்பார்

அரசியலுக்கு தனது குடும்பத்தினரை கொண்டு வரமாட்டேன் என்று கூறிய பாமக நிறுவனர், ராமதாஸ், தனது வார்த்தையை மீறி, தனது மகனை அரசியலுக்கு கொண்டு வந்தார். வன்னியர் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றினார். இதுபோன்ற அவரது செயல்கள், அவரும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான் என்பது பொதுமக்களுக்கு புரிய வந்தது. இதன்காரணமாக பல வன்னிய மக்கள், மருத்துவர் ராமதாஸ்மீது அதிருப்தி கொண்டனர்.

அதன் தொடர்ச்சிதான். பாமகவுக்காக உழைத்த வேல்முருகன்.  பாமக குடும்ப கட்சியாக மாறியதை  தட்டி கேட்டதால், கட்சியில் இருந்து ஓரங்கப்பட்ட நிலையில், அவர்  பாமகவில் இருந்து விலகி, தனது ஆதரவாளர்களுடன்  தனிக்கட்சி தொடங்கி கோலோச்சி வருகிறார்.  இதுமட்டுமின்றி, பாமகவுக்காக தங்களது உழைப்பை கொடுத்த முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, ஏகே மூர்த்தி, காடுவெட்டி குரு, தீரன் போன்றவர்களை ஓரங்ககட்டிவிட்டு, தனது மகன் அன்புமணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் சில மாவட்டங்களில் ராமதாஸ் மீதான மதிப்பு குறையத்தொடங்கியது.

இதற்கிடையில், கடந்த 2022ம் ஆண்டு தனது மகனை கட்சி தலைவராக நியமித்து அழகு பார்த்த ராமதாஸ் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மாற்றம்… முன்னேற்றம்… அன்புமணி என  தனது மகனை முதல்வராக உட்கார வைத்து பார்க்கும் ஆசையில்,   ஊரையே கலக்கி போஸ்டர் ஒட்டி வாக்கு வேட்டையாடினார். ஆனால், அவருக்கு கிடைத்தது அழுகிய மாம்பலம்தான்,  பல இடங்களில்  கட்சி வேட்பாளர்கள்,  டெபாசிட் பறிபோன துடன், அன்புமணியே தோல்வி அடைந்தது பாமக மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள் என்பதை வெளிச்சம்போட்டு காட்டியது.

இருந்தாலும், ஆளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, ராஜ்ய்சபா உறுப்பினர் பதவியை பெற்று, அதன்மூலம் தனது அதிகார மமதையை தந்தையும், மகனும் தீர்த்துக்கொண்டு வந்தனர்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக,  மாற்றத்தை கொண்டுவருவோம் என புருடாக்களை அவிழ்த்துவிட்ட பாமகவின்  பச்சோந்தித்தனமான அரசியல் நாடகம் பொதுமக்களிடம் எடுபடவில்லை.  இருந்தாலும் பாமகவின் கனவுகள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் வந்தன. பாமக தலைவராக வந்த அன்புமணி தனது மனைவியையும் கட்சிக்குள் கொண்டு வந்து,  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைத்தார். ஆனால், அவருக்கும் தோல்வியே மிஞ்சியது.

தமிழ்நாட்டில்,  குடும்ப கட்சியாக பாமகவின் நிலை நாளுக்கு நாள்  கேள்விக்குறியாகி வந்தது. இதை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இருவரும் உணர்ந்தாலும், கட்சியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல்,  அரசியல் பேரத்திலேயே குறியாக இருந்து வந்தனர்.   அது ஒரு கட்டத்தில்,  அன்புமணி தானே அனைத்திலும் தலையிட்டு, தந்தையின் அனுமதி மற்றும் ஆலோசனையை கேட்காமல், தானே களத்தில் இறங்கி, பேரத்தை முடிவு செய்வது,  தந்தை மகனுக்கு இடையே  நீருபூத்த நெருப்பாக இருந்து வந்தது. அதன்தொடர்ச்சி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்வது தெரிய வந்ததால்,  பொறுக்க முடியாத ராமதாஸ் பொங்கி எழுந்துவிட்டார்.  இதுவே,  தந்தை மகனுக்கு இடையே பெரும்  அதிகாரப்  போராக உருவெடுத்துள்ளது.

பாமக தலைவராக மகன் நியமிக்கப்பட்டது முதல், அவரது அதிகார மமதையால், பாமக நாளுக்கு நாள் தனது தனித்துவத்தை இழந்து வருகிறது.  கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறி வரும் பாமகவை மீண்டும், எழுச்சியுடன் கொண்டு வர பாமக நிறுவனர் ராமதாஸ் களத்தில் குதித்த நிலையில், தந்தை மகனுக்கும் இடையே கடும் சண்டை எழுந்துள்ளது.  இந்த சண்டை, சந்தைக்கடை சண்டையைவிட மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது.

தனது மகனை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன்மீதே கடுமையான பல பழிகளை சுமத்தி, அவர் மகனே இல்லை என்ற அளவுக்கு, விரக்தியுடன் பேசி வருகிறார்.  இதையடுத்து பாமகவுக்கு நானே தலைவர் என ராமதாஸ் கூறி, நிர்வாகிகளை மாற்ற, நான் தான் தலைவர் என அன்புமணி, அவர் தரப்புக்கு நிர்வாகிகளை மாற்ற பாமக தொண்டர்களோ, இது என்னடா சாமி… என தலையில் கை வைத்துக்கொண்டு, செய்வதறியாது திகைத்துபோய் உள்ளனர்.

இதற்கிடையில் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மோழியோ, ராமதாஸ்தான், பாமக தலைவர் என கூறி அவருக்கு அதரவாக பகிரங்கமாக செயல்பட்டு வருகிறார். டாக்டர் ராமதாஸ் ஆரம்பத்தில் வன்னியர் சங்கத்தை தொடங்கி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதை பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் கட்சியாக மாற்றி, அனைத்து சாதி, மதங்களை சேர்ந்தவர்களுக்கு கட்சியின் பங்களிப்பு வழங்கி கட்சியை நடத்தி வந்தார். ஆனால், தற்போது பாமக மீண்டும் வன்னியர் சங்கமாக மாறி இருப்பது, சமீப கால நடவடிக்கைகளில் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியே கடந்த இரு நாட்களாக ராமதாஸ்  செய்தியாளர்கள் மத்தியில், நவசரக நடிப்பை வெளிப்படுத்தி வருவது. பாமகவின் தற்போதைய நிலைக்கு,  தனது மகனே காரணம் என மீது  அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசி வருகிறார். சில நேரங்களில் கோபமாக பேசுபவர், பல நேரங்களில்,  பிள்ளை பாசத்தில் விரக்தியாக பேசுகிறார். அவரது செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவரது பிள்ளைப்பாசம், குடும்ப பாசம் எதிரொலிப்பதை  காண முடிகிறது.

நேற்றைய (12 ஜூன் 2025)  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ்,  பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது. என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி என்றவர், 2026 தேர்தல் வரை நான்தான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு எல்லாம் அன்புமணிதான் என கூறினார்.

மேலும், குலசாமி என்று கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள், எல்லாம் அய்யாதான் என்று சொல்லிக்கொண்டே பாதாளத்தில் தள்ளப் பார்க்கிறார்கள் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இன்று (13 ஜூன் 2025)   மீண்டும் தன  தைலாபுரம் தோட்டத்தில் திடீரென நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ்,  என் மூச்சு உள்ளவரை நான்தான் தலைவராக இருப்பேன் என கூறினார். அன்புமணியின் செயல்பாடுகளால் அவருக்கு தலைவர் பதவி வழங்க மாட்டேன். குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது. கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியதால்தான் அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பெற்றோரை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும். தாய்-தந்தையை மதிக்க வேண்டும். ஆனால், அன்புமணி மைக்கை தூக்கி வீசுவதும், தாயை பாட்டிலால் தாக்குவதும் போன்ற செயலில் ஈடுபட்டார். என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என கூறினால், அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார். 2026 வரை நான் தலைவராக இருப்பேன் என நான் கூறியிருந்தேன். அந்த முடிவை மாற்றி கொள்கிறேன்.

அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது என்று கூறியதுடன்,  தலித் எழில்மலை , பொன்னுசாமி மற்றும் இன்னும் சிலருக்கு அந்த பொறுப்பு களை கொடுத்தபோது அவர்களுடைய செயல்பாடுகள் மனதிற்கு திருப்தியாக இல்லாத நிலையில்,  அன்புமணிக்கு கொடுக்க வேண்டும் என்று கட்சியினுடைய மூத்த தலைவர்கள் எல்லாம் வற்புறுத்தியதன் பேரில் மத்திய அமைச்சர் பொறுப்பை  அவருக்கு வழங்கினேன்.

ஆனால்  இரண்டரை ஆண்டுகளிலேயே என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை;  நான் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்து விடுகிறேன் என அன்புமணி கூறினார்.  அவரிடம் தினம் தினம் பேசி இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்று கூறி அவரை சமாதானப்படுத்தினேன். அதன் பிறகு இரண்டரை ஆண்டுகள் நன்றாக செய்தார்.  உலக அளவில் விருதுகள் கூட பெற்றார். ஆனாலும் இப்போது தந்தை கிட்ட விருது வாங்க முடியவில்லை.

தந்தையை மதிக்க வேண்டும்.  தந்தை தாயை மதிக்க வேண்டும் என்று சொன்னாலே அன்புமணிக்கு கோபம் வந்து விடுகிறது.   celebrate your parents when they are alive. தந்தை தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இந்த வார்த்தையை நீங்கள் அவரிடம் சொன்னால் நான் மகிழ்ச்சியாக தானே வைத்திருக்கிறேன் என்று கூறுகிறார்.  மைக்கை தூக்கி வீசுவது, பாட்டிலை தூக்கி அடிப்பது என்றிருப்பவர் எப்படி பெற்றோரை  மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.

2026 தேர்தலுக்கு பிறகு பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறியதை காப்பாற்ற முடியவில்லை.

பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அவர்களை கொண்டாட வேண்டும். தந்தை, தாயை மதிக்கணும் எனச் சொன்னாலே அன்புமணிக்கு கோவம் வருகிறது. தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அன்புமணி மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை எடுத்து தாயை அடிக்கிறார்

அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மனஉளைச்சலை உண்டாக்குகிறார் அன்புமணி. தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வராத அளவுக்கு படுத்துகிறார் அன்புமணி.

பாட்டாளி சொந்தங்களே என்றால் பூரிப்பு ஏற்படுகிறது. 2026 தேர்தலுக்குப் பிறகு அன்புமணிக்குத் தலைவர் பதவியை தருகிறேன் என நேற்று சொன்னதற்கு 99 சதவீத பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த 1 சதவீதம் அன்புமணியின் குடும்பத்திற்காக விட்டுவிடுகிறேன்.

தருமபுரி, சேலம் போகும்போது மைக் வைத்து பேசக்கூடாது.  200 பேருக்கு மேல் கூட கூடாது . என்னை பார்க்க வேண்டும் என்றால் நான் தங்கி இருக்கும் உணவு விடுதிகளுக்கு வந்து தான் பார்க்க வேண்டும் என்று சொல்லலாமா? யார் ஆரம்பித்த கட்சி இது;   தனி ஒரு மனிதனாக 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இரவு பகலாக,  நான் பட்ட பாடு சொல்லி மாலாது.  அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன்; கட்சிக்காக உழைத்திருக்கிறேன்.

வன்னியர் சமுதாய மக்களுக்காக மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 324 சமுதாயங்க  சமுதாயங்களுக்கும் நான் பாடுபட்டு வருகிறேன்.  என்னுடைய முகநூலில்,  ட்விட்டரில்  தொடர்ந்து  எல்லா சமுதாயத்திற்கும் பொருந்துகிற மாதிரியான அறிக்கைகளை வெளியிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  இது போன்று யாரும் தமிழகத்தில் கொடுத்திருக்க மாட்டார்கள்.

அன்புமணியின்  செயல்பாடுகள் இந்த மாநாட்டிற்கு பிறகு மிகவும் மோசமாகிவிட்டது. அன்புமணியே இங்கு வரும்போது எல்லாம் சொல்லுவார்;   அவரிடம் இன்னும்  எத்தனை ஆண்டுகளுக்கு நான் இருக்கப் போகிறேன் என்று கூறினால், “நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு நன்றாக இருப்பீர்கள்” என்று அவர் வாயால் கூறுவார். அப்படி கூறியவர் தற்போது மார்பிலும் முதுகிலும் ஈட்டியால் கூட்டிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட வேதனையை அனுபவிக்கிறேன்.

தூக்க மாத்திரையை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை. அன்புமணியை நினைக்கும் போதெல்லாம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.  ஆனால் அவரை நினைக்காமலும் இருக்க முடியவில்லை;  ஆனால் அது பாசத்திற்காக அல்ல; அது எல்லாம் போய்விட்டது.

ராமாயணத்தில் தசரத சக்கரவர்த்தி ராமருக்கு ஆணையிடுவார்;  14 வருடம் வனவாசம் செல்ல வேண்டும் என்று சொல்லும்போது ராமருடைய முகம் அன்று பூத்த தாமரை மலர் போல் பிரகாசமாக இருந்ததாக கம்பன் வர்ணித்திருக்கிறார்.  நான் என்ன அன்புமணியை 14 ஆண்டுகள் வனவாசத்திற்கா செல்லச் சொல்கிறேன்.  செயல் தலைவராக இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து ஐயா என்னை,  செயல் தலைவராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். செயல் தலைவராக இருந்தா லும் இல்லாவிட்டாலும் கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து ஐயா இடுகின்ற கட்டளையை செய்வேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்., என் மனம் எப்படி குளிர்ந்திருக்கும்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொன்னால், அதெல்லாம் பொய் என்று அன்புமணி  கூறுகிறார். இப்போது போய் நீங்கள் கேட்டால் கூட நான் செயல்  தலைவராக இருப்பேன்;  ஐயா சொல்வது எல்லாம் கேட்பேன்; என்று சொல்லுவாரே தவிர,  நடப்பதெல்லாம் வேறாக இருக்கும்.

பாட்டாளி சொந்தங்களே என்று கூறும்போது  எனக்கு ஏற்படும் பூரிப்பு சொல்லி மாலாது.  ஆனால் அன்புமணியை பார்க்கும்போது ஏற்படுகின்ற அதிர்ச்சி, மனக் குமுறல்கள், எனக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. சேலம் சென்றிருந்தபோது  இதேபோன்று பிபி அதிகமாகி விட்டது. அங்கு  மருத்துவர் சரவணன் பல்வேறு சிகிச்சைகளை செய்து என்னை சரி செய்தார்.  இந்தக் ட்சியை சுயம்புவாக உருவாக்கிய  என்னையே  மைக் வைத்து பேசக்கூடாது என்று  கட்டுப்பாடு விதித்தார். பின்னர் 200 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று கட்டளை இடுகிறார்.

 கட்சியின் நிறுவனருக்கே இப்படி கட்டைளையிடுகின்ற  உரிமையை நான் அவருக்கு கொடுக்கவில்லை. ஆகையால் என் மூச்சுக்காற்று நிற்கும் வரை நான் தான் பாமக நிறுவனர், தலைவர்.” என்று கூறினார்.  மேலும் காலியாக உள்ள இளைஞரணி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 இதற்கிடையில், தந்தை- மகன் இடையோயான அதிகார மோதல் உச்சகட்ட நிலையை எட்டிய நிலையில், பூம்புகாரில் பாமக சார்பில் மகளிர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ராமதாஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில், அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது துணையின்றி, சிறப்பாக நடத்தி காட்டி, பாமகவுக்கு நான்தான் தலைவர் என்பதை நிரூபித்துவிட்டு, பின்னர் கட்சியிடன் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ராமதாஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பாமகவில் நடைபெறு வரும் மோதல் காரணமாக கட்சி இரண்டாக உடையும் நிலை உறுதியாகி உள்ளது. ஆனால்,  இரண்டாக மட்டுமே உடையுமா அல்லது சுக்கு துண்டாக சிதறுமா என்பது விரைவில் தெரிய வரும். சில மூத்த வன்னியர் சங்க தலைவர்களும், பாமகவை வாரி சுருட்ட தயாராகி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.  இதனால் மாம்பழம் துண்டு துண்டாக வெட்டப்படுமா அல்லது முழு மாம்பழமாகவே இருக்குமா என்பது விரைவில் தெரியவரும்,

பாமகவில் நடைபெற்று வரும் குடும்ப சண்டை தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக வன்னியர் மக்கள் வாக்குகள் பிரிந்து செல்வதையும் தவிர்க்க முடியாது.  ஏற்கனவே வன்னியர்கள் மத்தியில், திமுக, அதிமுகவுக்கு என தனி வாக்குவங்கிகள் உள்ள நிலையில், தற்போது பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பம், வன்னியர்களின் வாக்குகள் இரு திராவிட கட்சிகளுக்கும் செல்லும் என்பதை மறுக்க முடியாது… பொறுத்திருந்து பார்ப்போம்…

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் பாமக தலைவர் ராமதாஸ்!

அரசியல் களத்தில் ஓவராக சீன் போட்ட பாமக, பெருங் காமெடியாக மாறிப்போன பரிதாபம்

மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணியா? 2026ல்ஆட்சி அமைப்போம் எனும் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை நிறைவேறுமா?

 

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் பாமக தலைவர் ராமதாஸ்!

தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது; இதுவே தர்மம்! நீயா? நானா? என பார்த்துவிடுவோம்! ராமதாஸ் ஆவேசம்…