சென்னை: தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான முறையீட்டு மீதான உத்தரவை நாளை வழங்கவுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் வி.பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கவுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்ற காரணத்தால், அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் முடிவில், காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, அந்த ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஆனால், அந்த ஆலையின் தரப்பில் திறப்பதற்கு அனுமதி கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், மீண்டும் திறப்பது தொடர்பான உத்தரவை நாளை நீதிமன்றம் வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.