துபாய்: ஐபிஎல் 2020 தொடரில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்களின் பட்டியயில், இப்போது வரை 670 ரன்களுடன், பஞ்சாப் அணியின் கேப்டன் கேல்எல் ராகுல் முதலிடம் வகிக்கிறார். 603 ரன்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார் ஷிகர் தவான்.
ராகுலின் அணி போட்டியிலிருந்து முன்பே வெளியேறிவிட்ட நிலையில், ராகுலைவிட, இத்தொடரில் 3 போட்டிகளை கூடுதலாக ஆடும் ஷிகர் தவானுக்கு, அவரின் சாதனையை முறியடிக்க இன்னும் 68 ரன்கள் தேவைப்படுகிறது.
எனவே, மும்பைக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், சிறப்பாக செயல்படும் பட்சத்தில், 2020 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைக்கலாம்.
ஷிகர் தவான், ஒருவேளை அந்த சாதனையை செய்தாலும்கூட, ராகுலைவிட இவர் மொத்தம் 3 போட்டிகள் கூடுதலாக ஆடியவர் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே, ஒருவகையில் ராகுல்தான் உண்மையான சாதனையாளர் என்றாகிறார்.