அபுதாபி: டெல்லிக்கு எதிரான இறுதி பிளே ஆஃப் போட்டியில், 17 ரன்களில் வீழ்ந்த்து ஐதராபாத் அணி. இதன்மூலம், வரும் செவ்வாயன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பையை சந்திக்கிறது டெல்லி.
டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 189 ரன்கள் எடுத்தது.
பின்னர், சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியின் துவக்கமே மோசமாக இருந்தது. பிரியம் கார்க் 17 ரன்களிலும், கேப்டன் வார்னர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
மணிஷ் பாண்டே 14 பந்துகளில் 21 ரன்கள் அடிக்க, கேன் வில்லியம்சன் 45 பந்துகளில் 4 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 67 ரன்களை அடித்தார். அப்துல் சமது 16 பந்துகளில் 33 ரன்களை எடுத்தார்.
ஜேசன் ஹோல்டர் 15 பந்துகளில் 11 ரன்களையும், ரஷித் கான் 7 பந்துகளில் 11 ரன்களையும் அடித்தனர்.
இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழநது 172 ரன்களை மட்டுமே எடுத்த ஐதராபாத், 17 ரன்களில் தோற்று, தொடரிலிருந்து கடைசி அணியாக வெளியேறியது.
டெல்லி அணியின் ரபாடா 4 ஓவர்களில் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.