பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய நட்சத்திரங்கள் சிந்து மற்றும் சாய்னா ஆகியோர் சாதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்க இந்தப் போட்டித் தொடர் இரண்டு வீராங்கனைகளுக்கும் முக்கியமாதாகும்.

கொரோனா வைரஸ் பரவலால், இப்போட்டித் தொடரும் சிக்கலான சூழலிலேயே நடைபெறுகிறது. இங்கிலாந்தில் இந்த வைரஸ் தொற்று இருப்பதால், 7 இந்திய நட்சத்திரங்கள் இப்போட்டித் தொடரிலிருந்து விலகிவிட்டனர்.

அதேசமயம், சிந்து, சாய்னா நேவால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். சிந்துவைப் பொறுத்தவரை, உலகத் தரவரிசையில் 6வது இடத்தில் இருப்பதால், இவர் தனது வாய்ப்பை ஏற்கனவே உறுதிசெய்துவிட்டார்.

அதேசமயம், தரவரிசையில் 20வது இடத்திலுள்ள சிந்துவிற்கு, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற வேண்டுமெனில் இத்தொடரில் சிறப்பான செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், எந்த இந்திய வீராங்கனையும் பட்டம் வென்றதில்லை. எனவே, இந்த இருவரில் யார் ஒருவர் பட்டம் வென்றாலும், அது இந்தியாவிற்கு இந்தவகையில் கிடைக்கவுள்ள முதல் சாம்பியன்ஷிப் பட்டமாக இருக்கும்.