சென்னை:
இன்று துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் கலந்துகொள்ளும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவில் ரஜினிகாந்த் தனது விருப்பமான உடையான கருப்புநிற உடையுடன் கலந்துகொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது….
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் 1000 வாட்ஸ் பவரு.
சாமி சிலையும் கருப்புதான், யானை கருப்புதான், கூவும்குயிலும் கருப்புதான்,
வெண்ணிலவை உலகம் பாக்க வச்ச இரவு கருப்புதான்,
வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்புதான்
மண்ணுக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூட கருப்புதான்
மதுரை வீரன் கையிலிருக்கும் வீச்சருவா கருப்புதான்
பூமியில முதன் முதலா பொறந்த மனுஷன் கருப்புதான்
மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கருப்புதான்
கண்ணு முழி கருப்புதான்,
கற்பு சொல்லி தந்த அந்த கண்ணகியும் கருப்புதான்
தாய் வயிற்றில் நாமிருந்த கருவறையும் கருப்புதான்…. என்று கருப்பின் மகிமையை வர்ணிக்கும் அந்த பாடலின் இறுதியில்,
நம்மூரு சூப்பர் ஸ்டாரு……. ரஜினிகாந்தும் கருப்புதான்; அழகு கருப்புதான் என்று இருக்கும்…. இந்த பாடல் தமிழக மக்களிடையே பிரபலமாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பதில் ஐயமில்லை…
அதுபோல, தமிழக மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கவும், கருப்பு உடைகளை அணிந்தே தெரிவித்து வருகின்றனர்.
பிரபலமான சபரிமலை அய்யப்பனுக்கும் பிடித்த கலர் கருப்புதான்… கருப்பு உடை அணிந்தே பக்தர்கள் அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்…
இவ்வளவு பிரசித்திப் பெற்ற கருப்பு உடைகளை அணிந்து வருபவர்கள் துக்ளக் பத்திரிகையின் விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று துக்ளக் அறிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மாலை கலைவாணர் அரங்கில் துக்ளக் பத்திரிகையில் 50வது ஆண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக துணைகுடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடு கலந்துகொள்கிறார்.
விழாவில் வெளியிடப்பட உள்ள துக்ளக் பொன் விழா மலரை, வெங்கையா நாயுடுவிடம் இருந்து, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பெற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக தனக்கு பிடித்தமான கருப்பு உடைகளை அணிந்து வரும் ரஜினி, இந்த விழாவிலும், கருப்பு உடை அணிந்தே கலந்துகொள்ள வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள், அவரது மக்கள் மன்றத்தினர், பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்….
மக்களின் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி? அல்லது துக்ளக் குருமூர்த்தி அறிவிப்புக்கு பணிந்து, வேறு நிறை உடை அணிந்து செல்வாரா? இன்னும் சில மணி நேரங்களில் தெரிய வரும்.