சென்னை

ரும் மே மாதம் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வுகள் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு ஆனலைன் மூலம் மட்டும் வகுப்புக்கள் நடத்தப்பட்டன.   பிறகு பாதிப்பு குறைந்ததால்  கடந்த செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடந்து வருகின்றன.  கொரோனா அச்சுறுத்தலால் கடந்த இரு வருடங்களாக பொதுத் தேர்வுகள் ர்த்து செய்யப்பட்டன.

இதனால் 10, 11,மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அளிக்கப்பட்டன.   தற்போதைய நிலையில் பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.  இந்த வருடம் கண்டிப்பாக பொதுத் தேர்வுகள் நடைபெறலாம் எனவும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதாகவும் கூறப்படுகிறது.

அதே வேளையில் மாணவர்களின் வசதிக்காக பொதுத் தேர்வுகள் தள்ளிப்போகலாம் என ஒரு செய்தி பரவியது.  தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தள்ளிப்போக வாய்ப்பில்லை என கூறி உள்ளார்.  நேற்று 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே மாதம் நடக்கும் என ஒரு தகவல் வெளியாகியது.

அதே வேளையில் கல்வித்துறை அதிகாரிகள் இந்த தகவலை உறுதி  செய்யவில்லை.   இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்ட நிலையில் அரையாண்டு விடுமுறை கிடையாது எனக் கூறப்படுகிறது.  இவ்வாறு மாறி மாறி வரும் செய்திகளால் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாகவும்  கூறப்படுகிறது.