டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில், இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அவர் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய மத்தியஅரசு மறுத்து வருகிறது. ஆனால், மாநில அரசு அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி உள்ளது. ஆனால், கவர்னர் இந்த விஷயத்தில் முடிவு எடுக்காமல் பல ஆண்டுகாலமாக காலம் தாழ்த்தி வந்ததால், அதுதொடர்பாகவும் பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம், கவர்னரின் அதிகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பாக காரசாரமான விவாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேரறிவாளன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான வாதம் – தீர்ப்பு ஒத்திவைப்பு…