un assembly 1
 
ஐ.நா.வின் தற்போதைய பொதுச்செயலாளர் பான் கி மூன், தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்பதவியை வகிக்து வருகின்றார். அவரது பதவிக்காலம் டிசம்பருடன் முடிகிறது. தனக்குப் பின் பெண் ஒருவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவதை பான் கி மூன் ஆதரிக்கிறார்.

ஐ.நா. பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்தியாவும் கூறிவருகின்றது. வரும் தேர்தலில் பாலின சமத்துவம், பிராந்திய சுழற்சி முறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி வலியுறுத்தி இருந்தார்.

ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் 2017, ஜனவரியில் பதவியேற்பார். 5 ஆண்டுகளுக்கு அவர் பதவி வகிப்பார். ஒருவரை இரண்டாவது முறையாக இப்பதவிக்கு உறுப்பு நாடுகள் தேர்வு செய்யலாம்.

இதையொட்டி புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைமுறைகளை ஐ.நா. டிசம்பரில் தொடங்கியது. இப்பதவிக்கு பெண் வேட்பாளரை பரிந்துரைக்குமாறு உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும் அமெரிக்க தூதருமான சமந்தா பவர், ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் மோகென்ஸ் லிக்கெட்டாப்ட் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் ஐ.நா.வின் 193 உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பினர். அவர்கள் தங்கள் கடிதத்தில், ஐ.நா.வுக்கான அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்பாளர்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாவும் இருப்பதை உறுதிப்படுத்துவோம். ஐ.நா. தோன்றியது முதல், பெண் ஒருவர் பொதுச்செயலாளர் பதவியை இதுவரை வகித்த தில்லை. உயர் பதவிகளில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் உறுப்பு நாடுகள் பெண் வேட்பாளர்களையும் பரிந்துரைப்பது அவசியம்என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். குரோஷியாவின் வெளியுறவுத் துறை பெண் அமைச்சர் வெஸ்னா புசிக், மாசிடோனியா நாட்டைச் சேர்ந்த, ஐ.நா. பொதுச்சபை முன்னாள் தலைவர் ஸ்ரிக்ஜன் கெரிம் ஆகிய இருவர் மட்டுமே இதுவரை புதிய பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக லிக்கெட்டாப்ட் கூறினார்.

UN Assembly
உலகின் முதன்மையான இராஜதந்திர பதவியான ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும்  வேட்பாளர்கள் , இதுவரை இல்லாத வகையில், முதன் முறையாக தங்களின் கொள்கைகள் மற்றும் லட்சியத் திட்டங்கள் குறித்து 193 நாடுகளின் பிரதிநிதிகள் முன் விவரிக்கவுள்ளனர். மேலும்,  இத்துடன் நியூயார்க் மற்றும் லண்டன்  நகரில் பொது மேடைகளில் தோன்றி , தனிநபர்கள்  மற்றும் உலகம் முழுவதும் இருந்து சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின்  கேள்விகளை எதிர்கொண்டு பதிலளிக்கவுள்ளனர். 
லண்டன் தேர்தல் விவாத மேடை, வெஸ்ட்மின்ஸ்டர்,  மத்திய மண்டபத்தில் 3-ம் தேதி நடைபெறும். அங்குதான்  ஐ.நா.வின்  முதல் பொதுச் செயலாளர், ட்றிகுவே லீ, தேர்வு செய்யப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தல் மேடையை, ஐரோப்பிய அரசாங்கங்கள் நிதியால் நடத்தப் பட்டு வரும் அமைப்புகளான,  ஐக்கிய நாடுகள் சங்கம் – இங்கிலாந்து(யுஎன்ஏவின்-UK) மற்றும் எதிர்கால ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி அமைப்பு (நிதி) என்கிற  கொள்கை நிறுவனமும்   இணைந்து நடத்துகின்றன.
un logo 1
நியூயார்க் தேர்தல் விவாத மேடை நிகழ்வு 13 ஏப்ரல் அன்று ஃப்ளாடிரான் மாவட்டத்தில் உள்ள சிவிக் ஹால் எனும் ஒரு சமூக மையத்தில் மற்றும் மன்றத்தில்,   புதிய அமெரிக்கா சிந்தனைக்கிடங்கு எனும் அமைப்புடன் இணைந்து நடத்தப்படும்.
முதல் 70 வருடகாலத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் , திரைமரைவில், பாதுகாப்புச் சபையில் பெரும் வல்லரசுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அதற்குப் பின்,  ஒப்புதலுக்காக ஐ.நா. பொதுச் சபையில் சமர்பிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இந்த்த் தேர்வு, பெரும்பாலும், பூகோள அரசியல் சமரசத்தை மையமாகக் கொண்டு நடைபெற்று வந்தது.
ஒரு அடிமட்ட பிரச்சாரத்திற்கு பின்னர் இதுவரை ஏழு வேட்பாளர்கள் திறந்தவெளி போட்டியில் களம் இறங்குவதாக அறிவித்துள்ளனர். ஏப்ரல்  12-14 முதல்,  இந்த ஏழு மற்றும் புதிதாக களம் இறங்கும் போட்டியாலகள் அனைவரும் பொதுச்சபையில், “முறைசாரா பேச்சுவார்த்தை”யில் ஈடுபடுவர்.  பல பொதுச் சபை நிகழ்வுகள் போல கேள்வி மற்றும் வினா எழுப்புபவர்கள் இந்நிகழ்வையும் ஆதிக்கம் செலுத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் மேடையில், வேட்பாளர்கள்  “21-ம் நூற்றாண்டின் சவால்கள் என்ன, அதனை எவ்வாறு  உலகமும், ஐ,.நா. சபையும் தங்களின் தலைமையின் கீழ் செயல்பட போகின்றது என்பதை விவரித்து, தங்கள் மீது தொடுக்கப் படும் கேள்விக்கணைகளுக்கு  சாமர்த்தியமான பதில் அளிப்பார்கள் என எதிர்பார்ட்க்கப் படுகின்றது.
ஐ.நாவின் புதிய தலைவராக ஒரு பெண் தேர்வுசெய்யப் படுவாரா ? என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமுடன் காத்திருப்போம்.