delhi ban 3
டீசல் கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களே, நீங்களும் டெல்லியின் மைந்தர்கள் தானே? நீங்களும் அசுத்தக் காற்றைத்தான் சுவாசுக்கின்றீர்கள்?- தலைமை நீதிபதி கண்டனம்.
இன்று தில்லி மாசு தொடர்பான வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது.
Justice-Thakur-and-Sundaram-2
delhi ban 2
 
பல்வேறு டீசல் கார் உற்பத்தியாளர்கள் சார்பாக புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம்,  ஆர்யமா சுந்தரம்  மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் ஆஜராகினர்.
India Air Pollution
இம்மூவரையும் “டீசல் கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களே, நீங்களும் டெல்லியின் மைந்தர்கள் தானே? நீங்களும் அசுத்தக் காற்றைத்தான் சுவாசிக்கின்றீர்கள்?” என இந்தியாவின் தலைமை நீதிபதி எஸ் தாகூர் மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் ஆர். பானுமதி ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வு கடுமையாகச் சாடியது.
நீங்கள் வக்கீலா அல்லது, விற்பனைப் பிரதிநிதியா ?
நீங்கள் அவர்களின் கார்களைப் புகழ்ந்து பாடுவது விற்பனையாளர்கள் போன்றே உள்ளது.  விற்பனையாளர்கள் கூட உங்கள் அளவிற்க்கு  சிறப்பாக  இந்த வேலையைச் செய்ய முடியாது …. நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் பற்றி உணர்ச்சிபூர்வமாக  இருக்கலாம் ஆனால் நீங்கள் இந்த அறையைவிட்டு  “வெளியே போகும்  போது, அதே  அசுத்த காற்றைத்தான் சுவாசிக்கின்றீர்கள்” என அவர் புன்னகையுடன் கூறினார்.
delhi ban 1
தில்லி, 2000 சிசி திறனுக்கு மேலே உள்ள டீசல் கார்கள் பதிவு செய்யப் படுவதற்கு நடைமுறையில் உள்ள தடையை, மேலும்  நீட்டிக்கும் முடிவிற்கும் நீதிமன்றம் சென்றுள்ளது. இவ்வழக்கை எதாவது ஒரு சனிக்கிழமையன்று விசாரிக்க முடிவு செய்துள்ளது. ஆனால்  சரியான குறிப்பிட்ட தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
நீதிமன்றம் டீசல் கார்கள் பதிவு  அனுமதித்து , ஒரு  பெரும் தொகையை சுற்றுச்சூழல் இழப்பீடாக வசூலிக்கவும் பரிசிலிக்கின்றது. ஏனெனில், இந்த விலையுர்ந்த கார்களை வாங்கும் பெரும்பணக்காரர்களால் இந்த தொகையைக் கட்ட முடியும்.
நீதிபதி தாக்கூர்  “அத்தகைய வரிவிதிப்பு பெரிய விலையுயர்ந்த கார்கள் வாங்கும் வாடிக்கையாளர்களை பாதிக்காது “என்று குறிப்பிட்டார்.