சென்னை,

சென்னையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பாஜ தலைவர் அமித்ணாவின் மகன் குறித்த செய்திகள் குறித்து பதில் அளித்தார்.

அப்போது,   அமித்ஷா மகனின் நிறுவனத்தில் மத்திய அரசு சோதனை நடத்துமா? என கேள்வி எழுப்பினார். பாஜக தலைவர் அமித்ஷா மகனின் நிறுவனம் பற்றி பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போதைய  பா.ஜ. ஆட்சியில், எதிர்கட்சியினர் மீது உண்மையோ, பொய்யோ அதற்கு அப்பாற்பட்டு, முறைகேடு தொடர்பான புகார் வந்தால் உடனே மத்திய  அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற துறைகள் களத்தில் குதித்து  சோதனை நடத்துகிறது.

அதுபோல, அமித்ஷா மகன் மீது வந்துள்ள குற்றச்சாட்டு மீது சோதனை நடக்குமா என்பது தான் எனதுகேள்வி. சீசர் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்படடவர் என்பது போல் மோடி அதனை நிருபிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி நடவடிக்கை எடுப்பாரா என்பது குறித்து   பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் டெங்கு பாதிப்பைப் பற்றி கவலைப்படாத அரசுதான் உள்ளது. அதனால்தான் இந்த ஆட்சியை டெங்கு ஆட்சி என குறிப்பிட்டேன்.

டெங்கு காய்ச்சல் உழிரிப்பு குறித்து தமிழக அரசுக்கு கவலையில்லை. சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கருக்கு அக்கறையில்லை. வருமான வரி சோதனை வழக்கில் இருந்து தப்பிப்பது, குட்கா ஊழலில் இருந்து தப்பிப்பது குறித்து மட்டுமே கவனம் செலுத்துகிறார். அதனையும் தாண்டி மைனாரிட்டியாக இருக்கும் ஆட்சியை நிலைநிறுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறார்.

தமிழகத்தில் கொசு மருந்து அடிப்பதிலும் கூட ஊழல் நடைபெற்றிருக்கிறது. குட்கா ஊழலில் இருந்து தப்பிப்பது பற்றிதான் அமைச்சருக்கு இங்கே கவலையாக இருக்கிறது.

இந்த ஆட்சியில் அரசியல் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது.எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வேண்டாமென்றால் காழ்ப்புணர்வோடு சொல்வேன் எனக்கூறுவார்கள்.  அதில் காட்டும் அக்கறையை டெங்கு காய்ச்சல் குறித்து காட்ட வேண்டும்.

இறப்பை தடுக்கும் சூழ்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். தலைமை செயலர், முதல்வர் எடப்பாடியுடன் கொள்ளை, கும்மாளத்திற்கு உடந்தையாக உள்ளார்.

முரசொலி அலுவலகத்தில் பவள விழா காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சி அரங்கம் நிரந்தரமாக்கப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.